Translate

Monday 25 June 2012

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான  பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. 

தமிழர்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதுடன், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருந்த இடம்தெரியாமல் தொலைந்து மறைந்துபோய்விடச் செய்யும், திட்டமிட்ட நாசகார நகர்வை ராஜபக்ஸ்ச தலைமையிலான பௌத்த சிங்களப் பேரினவாத அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. 


தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்தழிக்கும் முயற்சியாக, முன்னைய சிங்கள இனவாதத் தலைவர்கள் காட்டிய வழியில், மிகவும் வேகமாகவும், அடாத்தாகவும், ராஜபக்ஸ்ச அரசு, தமிழர் தாயகப் பகுதியில், சிங்களக் குடியேற்றங்களையும், பௌத்த விகாரைகளையும் அமைத்துவருகின்றது. இராணுவ முகாம்கள், இராணுவக் குடியிருப்புக்களை, தமிழர் நிலங்களில் பெரியளவில் அமைத்துவரும் சிங்கள அரசு, தமிழ் மக்கள் அவர்களது சொந்த நிலத்தில், இராணுவக் கண்காணிப்பில், இராணுவப் பிடியில் அடிமைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர் என்ற உளவியல அச்சுறுத்தலை தமிழ் மக்கள் மீது வெளிப்படையாகவே மேற்கொண்டுவருகின்றது.

தென்தமிழீழம் வடதமிழீழம் என அனைத்து தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் நிலங்கள், சிங்;களப் பேரினவாதத்தால் விழுக்கப்பட்டுவருகின்றன. 
தமிழ்மக்களை சிங்களப் பேரினத்தினுள் கரைத்துவிடுகின்ற முயற்சியை சிங்கள அரசும் அதனோடு செயற்படும் சக்திகளும் மேற்கொண்டுவருகின்றன. 

தமிழ்மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்பது குறித்தும், தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பது குறித்தும் சர்வதேச சமூகம் தற்போது அக்கறைகொண்டிருக்கின்ற இத்தருணத்தில், தமிழ்மக்களின் தாயகத்தை வல்வளைப்புச் செய்து, தீர்வுக்கான தளத்தை சிதைத்துவிடுவதில் சிங்கள அரசு மிகத் தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. 

சிங்கள அரசின் இந்தத் திட்டமி;ட்ட, தாயகத்தை கபளீகரம் செய்யும் நாசகாரத் திட்டத்தை, சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி, இதற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தேசியப் பற்றுறுதிகொண்ட ஏனைய கட்சிகள், அமைப்புக்கள் மக்களை இணைத்து போராட்டத்தில் குதித்துள்ளன. 
ராஜபக்ஸ்சவின் ‘கழிவு அரசியலுக்கு’ முகம்கொடுத்தபடி, வெள்ளைவான் கடத்தல்கள், படுகொலைகள் என்ற அச்சமூட்டும் ஆபத்தான தளத்தில், இத்தகு சனநாயகப் போராட்டங்கள் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. 
எமது தேசிய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படாமல் காக்கப்படவேண்டுமாயின், சிங்கள அபகரிப்பில் இருந்து எமது தாயகம் முதலில் காப்பாற்றப்படவேண்டும் என்ற அதிமுக்கியமான கடமையைச் சுமத்திருக்கின்ற தாயக மக்களும், தமிழர் அரசியல் கட்சிகளும், இந்த முக்கியமான காலகட்டத்தில், இப்போராட்டங்களை நடாத்த முனைந்துள்ளன. 
சிங்கள இராணுவத்தின் காட்டாட்சிக்கு மத்தியில், தாயகத்தில் எமது உறவுகள், நடாத்தும் போராட்டத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுடன், தாயகக் காப்புப் போராட்டத்தின் சம பங்காளிகளாக நாமும் அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும். 

எமது தாயகத்தை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து காக்க மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தை, சர்வதேச கவனத்திற்குக் கொண்டுவந்து, தமிழ்மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த ஆபத்தை, வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டி, சிங்களத்தின் கோரப்பசிக்கு நாளும் இரையாகிக் கொண்டிருக்கின்ற எமது தாயகத்தை காப்பாற்ற புலம்பெயர் தமிழ் மக்கள் தீவிரமாய் போராடவேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் இதற்கான போராட்ட அழைப்புக்கள் தமிழர் அமைப்புக்களால், குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசால் விடுக்கப்பட்டிருக்கின்றன. நமக்கிடையேயான கருத்துவேறுபாடுகள் முரண்பாடுகளை ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, எங்களின் தாயகத்தின் இருப்பை காப்பது அதிமுக்கிய கடமையாகக் கொண்டு, அனைவரும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டு, இதுவிடயத்தில் அனைத்துலகத் தலையீட்டை வலியுறுத்தவேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில், அனைத்துலகத்தின் தலையீடே, இத்தகு பிரச்சினைகளுக்கு தீர்வாகமுடியும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் நடுவம்- பிரான்ஸ்

No comments:

Post a Comment