Translate

Monday 25 June 2012

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !
Date: 26.06.2012
Time: 5.00 pm to 7.30pm
Venue : 10 Downing Street, London, SW1A 2AA
தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும், இலங்கை இராணுவத்தினர் நில அபகரிப்பைச் செய்து வருகின்றனர். இந் நிலை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இராணுவத்திற்கும், சிங்களவர்களுக்குமே காணிகள் இருக்கும் நிலை தோன்றும். பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்கள் பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது. இதனை தடுக்க பிரித்தானியா தலையிடக்கோரி, நாளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் இல்லம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதற்கான பொலிஸ் அனுமதியையும் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னதாகப் பெற்றுள்ளனர்.


இலங்கை அரசுக்கு பல உதவிகளையும், வரிச் சலுகைகளையும் அள்ளி வளங்கிவரும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய அரசின் கதவுகளைத் தட்ட, மக்கள் அலையெனத் திரண்டு வரவேண்டும் ! நாளை மாலை 5.00 மணி முதல் 7.30 மணிவரை இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்களின் வாக்குப் பலத்தை பார்க்கும்போது, பிரித்தானிய அரசிற்கு, தமிழர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கவேண்டிய சூழ் நிலை காணப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஈழத்தில் நடக்கும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரா, நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் கலந்துகொண்டு, எமது எதிர்ப்பை சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் ! குறிப்பாக பிரித்தானிய அரசுக்கு, இச் செய்தி எடுத்துச்செல்லப்படவேண்டும் !


 

No comments:

Post a Comment