Translate

Monday 25 June 2012

,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்


உங்களை அந்தக்கடவுளால் கூட திருத்த முடியாது!!பொய் செல்ல சிலர் அதற்கு ஆமா போடா சிலர்,கடவுளே அப்பாவிகளை இவர்களிடமிருந்து காப்பாற்றும்,இவர்களின் பொய்களை நம்பி சோம்பேறிகளும் மூடர்களும் நேற்று இருந்ததைவிட இன்று பெருகிவிட்டனர்,காரணம் விஞ்ஞானம் தந்த ஊடகங்களை இவர்கள் துஷ்பிரயோகம் செய்வதே!!



இவர்கள் தமது இலக்கை அடைய உம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுகிறார்கள்,இதில் கெட்டவரிடம் நீர் இலகுவில் ஏமாந்து போகிறீர்,,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்,ஓ!! இவர்களிடம் அதிகம் தொடர்பில் உள்ளதால் இவர்களின் குணம் உமக்கும் வந்துவிட்டதோ??



ஆண்டவனே இவர்களை மன்னித்து திருத்தும்,இவர்கள் சொல்வது பொய்,முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை அப்பாவிகள் உணர வையும்,கடமையை சரியாக செய்வதே நம் கடமை,ஆண்டவனை தொழுவதும்,பிரார்த்திப்பதும் தூய்மையான மனத்துடன் உள்ளவற்கே என்பதை புரிய வையும்,செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்திடும்,மதம் என்பது ஒரு ஒழுங்கு,வழிமுறை,கட்டுக்கோப்பு என்பதை உணர்த்தி மாதா,பிதா,குரு தெய்வத்தின் மலரடி தொழ உண்மை,நேர்மை,மட்டுமல்லாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு தேவை என்பதை சொல்லும் ,தெளிவு படுத்தும் நெறியே ,மார்க்கமே மதம் என்பதை புரியவையும்.


மதம் மாறுவது உமக்கே பிடிக்காதது என்பதை இப்பாவிகள் உணரவையும்.கடவுள் ஒருவர் அவரை உண்மையுடன் பக்தியுடன் தொழுவது அவர் இடம் சேரவே அன்றி பணம் படைத்தவனாக,புகழ் பெற்றவனாக வாழவோ,காதல்,வீடு,வாகனம் போன்றவை பெற அல்ல என்பதை உணர்த்திவிடும்.கேட்டதை கொடுப்பவன் கடவுளே அல்ல என்பதையும் கடவுள் தாயை போன்றவன் என்பதையும் பிள்ளைக்கு என்ன எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதை அந்ததாயாகிய நீ அறிவாய் என்பதையும் இறுதியும் அறுதியும் உறுதியுமாக உணர்த்திடும்,ஆமாம்!!

இதி நான் எழுதியது இதற்காகவே:-கேட்டதை தரும் கடவுள்.

கணவனை இழந்த ஏழைப்பெண், மளிகைக் கடைக்குச் சென்று தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் ஒரு நேர சாப்பாட்டுக்கான உணவு பொருட்களை கொடுக்கும்படி கேட்டாள். வியாபாரி, ""உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?'' என்று கேட்டார்.

""காசு எதுவும் இல்லை. ஜெபம் மட்டுமே இருக்கிறது,'' என்றாள்.

உடனே கடைக்காரன், ""உன் ஜெபத்தை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடு. அதன் எடையளவு உணவு பொருட்களை தருகிறேன்,'' என்றார்.


அவளும் எழுதிக் கொடுத்தாள். அந்த பேப்பரைப் படித்து கூட பார்க்காமல் தராசிலே வைத்தார். மற்றொரு தட்டில் ரொட்டித் துண்டை வைத்தார். தட்டு கீழே இறங்கவில்லை. மேலும் சில உணவு பொருட்களை வைத்தார். தட்டு இறங்கவில்லை. சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்று பொருட்களை அந்த பெண்ணிடம் கொடுத்தார். பின்பு தான் தராசு பழுதாய் இருந்ததை கண்டு பிடித்தார்.

அவள் சென்ற பிறகு, அந்த காகிதத்தில் என்ன இருக்கிறது என்பதை வாசிக்க திறந்து பார்த்தார். அதில், ""ஆண்டவரே! எனக்கு தேவையான உணவை இன்று தாரும்,'' என்று எழுதியிருந்தது.

No comments:

Post a Comment