Translate

Friday, 29 June 2012


போலிக் குற்றச்சாட்டுக்களை கூறி வீண் பிரச்சினையை தோற்றுவிக்கிறார் ஜெயலலிதா:கோசல _
  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு கிடையாது. போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறி வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முற்படக் கூடாது என்று கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. 


இது குறித்து கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய கூறுகையில், கச்சதீவு பகுதிகளில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதாக தமிழக அரசியல் வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்திய மீனவர்களை தாக்க வேண்டிய தேவை கடற்படைக்கு கிடையாது. ஆனால் இந்திய மீனவர்கள் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி மீன் பிடிக்கின்றனர்.

இவர்களை கைது செய்து சட்டத்தின்படி பல முறை நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு போதும் தாக்கியதில்லை. தமிழக முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றார். இக் குற்றச்சாட்டு போலியானது. இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுகளினால் இரு நாட்டு உறவுகளுமே பாதிப்படைகின்றது என்றார். 

No comments:

Post a Comment