பூஸாவுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி, அநுராத புரம் நீதி மன்ற வழக்குத் தவணை எனத் தெரிவித்து அநுராத புரம் சிறையில் தனியறையில் தடுத்து வைக்கப்பட்டு கழிவு நீர் ஊற்றப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சக கைதியை வவுனியாவுக்கே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வவுனியா சிறைக் கைதிகள் இரண்டாவது நாளாக நேற்றும் தமது உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நட ராஜா சரவணபவன் என்ற அரசியல் கைதியே இவ்வாறு அநுராத புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவராவார்.
இவர் தற்போது கொழும்பு விளக்கமறியற் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகக் கைதிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள இவருக்கு எந்தவிதமான மாற்று உடைகளும் வழங்கப்படவில்லை என்றும், தன் மீது ஊற்றப்பட்ட மனிதக் கழிவு நீர் படிந்த உடையுடனேயே இன்னும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதனை உத்தியோகப் பூர்வாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் வவுனியா சிறைக் கைதிகளின் உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கைதிகள் தெரிவித்துள்ளனர். _
No comments:
Post a Comment