வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது?எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கேள்வி
நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்,
"வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்கள் விரும்பியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் வாய்ப்பளிக்கப்படவில்லை, இப்போதும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியென்றால் புலிகளுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.seithy.co...&language=tamil
No comments:
Post a Comment