முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலைக்கப்பட்டுள்ள வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்காக ஆளும் கட்சியில் பலர் போட்டியிடுவதாகத் தெரியவருகிறது.
வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்காக ஆளும் கட்சியில் முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளது.
தற்போதைய முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்காக போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் பதவி பொலனறுவை பிரதேச அரசியல்வாதிக்கு வழங்கப்பட வேண்டுமென சிரேஸ்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment