Translate

Saturday 30 June 2012

கொழும்பு பயணத்தில் நடந்தது என்ன? இலங்கையிடம் காட்டத்தைக் காட்டினாரா சிவசங்கர்மேனன்?


கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சென்ற சிவசங்கர் மேனன் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புகளின் போது இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய தரப்பில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சிவசங்கர் மேனன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment