கனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிள் நாடு கடத்தப்படலாம்!
கனடிய குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்ற அகதிகள், நிரந்தர வாழ்விட உரிமை பெற்றவர்கள் மற்றும் விருந்தினர்களை எளிதாக நாடு கடத்த முடியும்.
மேலும் இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. இதுதவிர கனடாவுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவர்கள், நாட்டின் நலனுக்கு எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கருதினால் அமைச்சர்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது
.
.
No comments:
Post a Comment