தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
இலங்கையில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்திருந்தனர்.
இதில் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன்,மாநில பொதுசெயலாளர் காவேரி, இணை பொதுச்செயலாளர் போரூர் சண்முகம்,அமைப்பு செயலாளர் தாரமங்கலம் காமராசு, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் ஈழத்தமிழர்களின் சிக்கலுக்கு தமிழீழம் அமைப்பதற்கான தேவையை வலியுறுத்தி அனைத்து கட்சி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அதனை மத்திய அரசின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி ஆதரவு திரட்டப்பட வேண்டும். இதனை ஆதரிக்காத அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இதோடு ஈழத்தமிழர்களின் போரில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்ததில் ஒருவர் பிரணாப் முகர்ஜி. இவரை வரும் குடியரசு தலைவர் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் தோற்கடிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களை விடுதலை...
கடந்த 20 ஆண்டுகளாக செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.
கருணை மனு
குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் 35 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருப்பது போன்று, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களையும் பரிசீலித்து வாழ்நாள் தண்டனையாக குறைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment