கருணாவுடன் கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக் குழுவின், பிரமுகர் இனியபாரதியை களமிறக்க மகிந்தர் திட்டமிட்டுள்ளார் என அறியப்படுகிறது. பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் என உலகில் உள்ள அனைத்து ஆடாவடிகளையும் செய்துவரும் இனியபாரதியை மகிந்தர் தனது கிழக்கு மாகாண இணைப்பாளாராகப் போட்டிருந்தார். லண்டனில் வசித்துவரும் முன்நாள் தமிழ் எம்.பியான சந்திரநேரு சந்திரகாந்தனுக்கு கொலை எச்சரிக்கை விட்ட காரணத்தால் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் குள்ளவாளி என அடையாளம் காணப்பட்டார் இனியபாரதி. இவருக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதுமட்டுமால்லாது, கற்றுக்கொண்ட பாடத்துக்கான நல்லிணக்க ஆணைக்குழு , இவரை குற்றவாளி என்று அறிவித்தது.
போதக்குறைக்கு ஐ.நா மற்றும் சிறுவர்களுக்கான அமைப்புகள் இனியபாரதியை நேரடியாகவே குற்றவாளி எனச் சாடியுள்ளனர். இந் நிலையில், வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில், கிழக்கில் மக்களை மிரட்டவும், கள்ள வாக்குகளைப் போடவும் இனியபாரதியை மகிந்த களமிறக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபோன்ற அடாவடிகளைப் புரிந்த நபர் ஒருவரை தனது இணைப்பாளராக வைத்திருக்கும், பெருமை மகிந்தருக்கே சாரும். உலகில் வேறு எந்த மூலையிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை ! இது இவ்வாறு இருக்க இனியபாரதி கைதுசெய்யப்பட்டார் என்றும், போர்குற்றங்களுக்காகவே தாம் அவரைக் கைதுசெய்தோம் எனவும் ராஜீவ விஜயசிங்க லண்டனில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இனியபாரதியோ இலங்கை இராணுவத்தின், பாதுகாப்போடு சர்வசாதாரணமாக கொழும்பில் வலம் வருகிறார். இதுதான் இலங்கையின் இன்றைய நிலை.

No comments:
Post a Comment