Translate

Wednesday 27 June 2012


அதிர்வு இணையத்தை இலங்கை அரசு இலங்கையில் தடைசெய்துள்ளது !
அதிர்வு இணையத்தை இன்று முதல் இலங்கையில் பார்க்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசானது அதிர்வு இணையத்தை இலங்கையில் முற்றாகத் தடைசெய்துள்ளது. இலங்கை அரசின் மனிதப்படுகொலை, இன அழிப்பு , போர்குற்றங்கள் என்பன தொடர்பாக பல ஆதாரங்களை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் பிரித்தானியா வந்து, பெருத்த அவமானத்துடன் திரும்பிய மகிந்தர், தனக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது யார் என்று அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கோரியிருந்தார் என்ற செய்திகள் வெளியானது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரிகள் இருவர் ஒரு அறிக்கையை கடந்த வாரம் சமர்பித்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

இதனை அடுத்து அதிர்வு இணையத்தை இலங்கையில் தடைசெய்ய, பாதுகாப்பு அமைச்சு, ISP இன்ரர் நெட் வழங்குணருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஈழத்தில் உள்ள மக்கள், புலம்பெயர் தேசங்களில் நடக்கும் எழுச்சிகளை அதிர்வு போன்ற இணையங்கள் ஊடாக வாசித்து அறிகின்றனர். இலங்கையில் முதலில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் ! பின்னர் ஊடக அடக்குமுறை ஆரம்பமானது, தற்போது வெளிநாடுகளில் இயங்கும் ஊடகங்களை பார்க்கவும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது. மொத்தத்தில் இலங்கையில் ஊடக சுதந்திரம் சொற்ப அளவு கூட இல்லை என்பதனை இது நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

இதனை விடவும், சரவணபவான் எம்.பி, எந்த எந்த இணையங்களை இலங்கையில் தடைசெய்யவேண்டும் என ஒரு லிஸ்ட் தயாரித்துக்கொடுத்துள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:

Post a Comment