யாழ்ப்பாணம் -
தமிழர் தாயகத்தில் நடந்து கொண்டி ருக்கும் நில அபகரிப்புக் குறித்த பல் வேறு விடயங்கள் தொடர்பில் தமி ழ்த் தரப்புக்கள் எதிர்ப்புக்களைத் தெரி வித்து வருகின்றன.தமிழ்த் தரப்புக் கள் தெரிவித்து வருகின்ற எதிர்ப்பு க்கள் என்பது, அரசாங்கத்தை திசை திருப்புமென்றோ அல்லது நிலஅபகரி ப்பை அரசு நிறுத்துமொன்றோ எதிர் பார்க்க முடியாது.
இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் எதிர்ப்புணர்வை எங்ங னம் முறியடிக்க முடியும் என்பது தொடர்பில் அதிக சிரத்தை செலுத்து வதுடன்அரசிற்கெதிராக அல்லது இந்த நாட்டிற்கு எதிராக தமிழர்கள் எப்படி செயற்பட முடியும் என்று கடு ங்கோபம் கொள்ளும் அளவிலேயே நிலைமை உள்ளது.எனவே, தமிழர் தாயகத்தில் இடம்பெறக் கூடிய திட்ட மிட்ட நிலஅபகரிப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்புக்கள் தங்கள் எதிர்ப் பைக் காட்டுவது என்பது சர்வதேச சமூகத்தின் பார்வையை இலங்கை மீது வலுப்படுத்துவதாக அல்லது இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தத்தை அதிகரிப்பதான செயற் பாடாக இருத்தல் வேண்டும்.
ஆனால், தமிழ்த் தரப்புகள் நடத்துகி ன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்,விடும் கண்டன அறிக்கைகள் என்பன இல ங்கை அரசை எச்சரிக்கவோ அல்லது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதா கவோ இல்லை.மாறாக தங்கள் இரு ப்பை நிலைநிறுத்தும் போராட்ட மாகவே உள்ளது. உண்மையில் தமி ழர்களின் அதிகூடிய பாராளுமன்றப் பிரதி நிதிகளைக் கொண்டுள்ள தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரா ளுமன்ற உறுப்பினர்களில் பலருக்கு தமிழர் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருக்கின்றது. தமிழ் மக்களுடனான தொடர்பாடல் இன்மை, ஊடகங்களில் வருகின்ற செய்திகளைப் படிக்காமை போன்ற காரணங்களினால் தமிழ்ப் பிரதேசங் களில் நடக்கும் எந்த விடயங்களை யும் அவர்கள் அறிவதில்லை.அதேவேளை, அரசிற்கு நாம் எதிர்க் கட்சியாக இருப்பதற்காக, அரச அமைப்புகளூடான தொடர்பை பேணாது விடுவதோ அல்லது அரச அமைப்புகளுடன் தொடர்பை கொண் டிருந்தால் அது தமிழ் மக்கள் மத்தி யில் தவறான கண்ணோட்டத்தைக் கொடுக்கும் என்று நினைப்பதோ மிகப் பெரும் தவறு.குறிப்பாக அரச அதிபர்களுடன் நல்லுறவைப் பேணு வதன் மூலம் தமிழர் பிரதேசங்களில் நடக்கின்ற விடயங்களை அறிதல், வடக்குக் கிழக்குக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுடன் நல்லு றவைப் பேணி தமிழர் தாயகத்தில் நடக்கின்ற போதைப்பொருள் கலாசா ரத்தை மற்றும் விவகாரங்களை கட் டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைக ளிலும் ஈடுபடவேண்டும்.அப்போது தான் இவர்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருக்கமுடியும்.அவ்வகையில் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் என்பது, தொடர் ந்து முன்னெடுக் கப்படுவது அவசி யம். அடையாளத்திற்கான ஆர்ப்பா ட்டத்தினால் எந்தப் பிரயோசனமும் இல்லை. தேவை ஏற்படும் போது மக் கள் போராட்டமாக சித்தரிப்படுவதும் கட்டாயம்.
No comments:
Post a Comment