Translate

Saturday 16 July 2011

லண்டனில் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி.

லண்டனில் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி.

தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி லண்டனில் சிறப்பாகநடைபெற்றது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக்கூடங்களின் வடமேற்கு லண்டன்பகுதிப் பாடசாலைகளுக்கிடையிலேயே இந்த விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டது.

வடமேற்கு லண்டன் பகுதிகளைச் சேர்ந்த சவுத்ஹோல் தமிழ்க் கல்விக்கூடம்ஹெயிஸ் தமிழ்க்கல்விக்கூடம்கிலிங்கடன் தமிழ்க் கல்விக்கூடம்கவுண்சிலோ தமிழ்க் கல்விக்கூடம் ஆகியனஇந்த வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றின.

கடந்த சனிக்கிழமை (09-07-2011) காலை 9:30 க்கு ஆரம்பமான இந்த விளையாட்டுப்போட்டி மாலை8:30 வரை நடைபெற்று பின் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும்வெற்றிக் கொண்ணங்கள்மற்றும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு இரவு 10:00 மணியோடு நிறைவுபெற்றது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த விளையாட்டுப்போட்டியில் முதலில் பிரித்தானியத் தேசியக்கொடியும்பங்குபற்றிய பாடசாலைகளின் கொடிகளும் ஏற்றப்பட்டது.

இதில் பிரித்தானியத் தேசியக் கொடியை பிரித்தானியாவிற்கான தமிழ்க்கல்விக்கூடங்களின்பொறுப்பாளர் திருராஜ்குமார் அவர்கள் ஏற்றிவைக்கபாடசாலைகளின் கொடிகளை அந்தந்தப்பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்றிவைத்தனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400மீட்டர் ஓட்டம்என்பனவும்குண்டெறிதல்ஈட்டி எறிதல்கூடைப் பந்துமற்றும் சிறுவர்களுக்கானபந்து பொறுக்குதலோடு 50 மீட்டர் ஓட்டம்தேசிக்காய் கரண்டிமற்றும் பார்வையாளர்களுக்கான 400மீட்டர் ஓட்டம்கயிறிழுத்தல் போட்டிஆசிரியைகளுக்கான பந்து கைமாற்றுதல் போன்றனஇடம்பெற்றது.
 
பரிசில்களை விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த அப்பிரதேச மேஜர்மற்ரும்பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடுவெற்ரிபெற்ற வீரர்வீராங்கனைகளுக்கான பரிசில்களையும் வழங்கி கெளரவித்தனர்.

குறிப்பாக தாயகத்தில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் வர்ணங்களினால் இல்லம்அமைக்கப்படுவது போல் இங்கும் கவுண்சிலோ தமிழ்க் கல்விக்கூடம் சிவப்பு நிறத்திலும்,சவுத்ஹோல் தமிழ்க் கல்விக்கூடம் மஞ்சள் நிறத்திலும்ஹெயிஸ் தமிழ்க் கல்விக்கூடம் நீலநிறத்திலும்கிலிங்கடன் தமிழ்க் கல்விக்கூடம் பச்சை நிறத்திலும் தமது இல்லங்களை அழகுறவடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment