பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம்
சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா
நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக்கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமதுஅரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும்,பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாகஉலகெலாம் உருவெடுக்க வேண்டும்.
திடகாத்திரமான, சாமர்த்தியமான எமது செயல்கள் யாவும் சிங்கள தேசத்தை திணறவைக்கவேண்டும். ஜனநாயக நாட்டின் சர்வாதிகாரி என்ன செய்வது,ஏது செய்வதென்றுதெரியாது தடுமாறவேண்டும். எமது ஒவ்வொரு முன்னெடுப்பும் சிங்கள அரசுக்குப்பின்னடைவைத் தரவேண்டும். நீதி வேண்டும் உலகம் எமக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.அழிக்கப்படும் எம்மினம் அயர்ந்து தூங்க வேண்டும்.
இவையெல்லம் நிறைவுபெற, எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தற்பத்தையும் நாம்முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பதுங்கி வாழ்ந்த சிங்களத் தலைமை மீண்டும்பயந்து வாழ வேண்டும். பயத்தைக் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்கமுயலும் சிங்கள அரசும், அதே கொள்கையுடன் இயங்கும் தமிழ் அமைப்புக்களும்தக்கபாடம் படிக்கவேண்டும்.
நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டில் ஒன்றுதான் சிறீலங்காவில் இருந்து இறக்குமதிசெய்யும் பொருட்களை புறக்கணிப்பது. இந்தப் புற்க்கணிப்பு காலதாமதமின்றிநிறைவேற்றப்பட வேண்டும். இப்பொருட்களை வாங்கி எம் உடன்பிற்ப்புகளின் அழிவுக்குநாமும் பாத்திரமாகலாமா? குறிப்பாக, சனல் 4 காட்சிகளைக் கண்டபின்பும் நாம் சிறீலங்காபொருட்களை வாங்குவது தப்பல்லவா?
இறக்குமதி செய்யும் பொருட்களால் பெறப்படும் அந்நியச் செலாவணியில் கிடைக்கும்பணத்தால் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டுதானே நிராயுதபாணியான எம் இனத்தை,உயிரிலும் மேலான எம் உறவுகளை காட்டு விலங்குகள் போல் வேட்டையாடிவிளையாடுகிறார்கள் அந்தக் கோழையர்கள்.
நாம் அப்பொருட்களை வாங்குவதை நிறுத்துவதோடு நிற்காமல், மாற்றாருக்கும் சிங்களஅரசால் நடாத்தப்படும் அநீதிகளை எடுத்துக்காட்டி. எம் வேதனையை விளக்கி, எம்துன்பங்களை எடுத்துரைத்து அவர்களையும் சிறீலங்கா பொருட்களை வாங்காது தடுக்கவேண்டும்.
சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அங்கிருந்து இறக்குமதிசெய்வதை உடனடியாக நிறுத்தி, மாற்று நாடுகளிலிருந்து அதே பொருட்களைக் குறைந்தவிலையில் கொள்வனவு செய்து, அதை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யவேண்டும். இறக்குமதி செய்பவர்களின் திறமையிலும், ஒத்துழைப்பிலும்தான் இந்தமாற்றத்தை சுமூகமாகவும், துரிதமாக்வும், வெற்றிகரமாகவும் நிறைவுசெய்ய முடியும்.
இதுவரை, சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை விற்கும் வியாபாரநிலையங்கள் அப்பொருட்களை தமது கடைகளில் விற்பதை நிறுத்தவேண்டும். மாற்றுநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களை மட்டுமே விற்கவேண்டும். சிங்களநாட்டுப் பொருட்களை நாம் விற்பனை செய்வதாதால் நாமே எம் இனத்தை அழிக்கஉதவுவதாக அமைந்துவிடுமல்லவா?
விற்பனையாளர்களே! இருக்கும் பொருட்களை விற்பதற்கான காலம் இவ்வாண்டுஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ). இன்று தொடக்கம் சிறீலங்காவில் இருந்துஇறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதைதை நிறுத்திவிடுங்கள்.மாற்று நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையே வாங்கிவிற்குமாறு, அழிக்கப்படும் உறவுகள் சார்பில், உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
எம் இனிய உறவுகளே! சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைவாங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். ஐப்பேசி மாதம் முதலாம் திகதிக்குப் (Oct 1st )பிறகு சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கமாட்டோம்என்று இன்றே சபதமெடுத்துச் செயற்படுங்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து விற்பனைசெய்யும் வியாபார நிலையங்களைப் புறக்கணியுங்கள். மழையான உங்கள் உறவுகளைநிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.
சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை முற்றாகப் புறக்கணிக்கும்நாளான ஐப்பேசி மாதம் முதலாம் திகதி (Oct 1st ) உலகளாவிய ரீதியில் ஓர்சரித்திரநிகழ்வாக அமைய வேண்டுமென, வாய்பேசா உறவுகள் சார்பில், உங்களைஉரிமையுடன் வேண்டுகிறோம்.
கனடா நாட்டில் தொண்டர்களாகச் சேர விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கானவிபரங்களையும், அன்பளிப்புச் செய்ய விரும்புவோருக்கான வங்கி விபரத்தையும் கீழேதருகிறோம். மற்ற நாடுகளில் வாழ்பவர்கள், அந்த நாட்டு நாடுகடந்த தமிழீழ அரசின்பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு தமது பங்களிப்பைத் தவறாது செலுத்துமாறுஅன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
தொடர்புக்கான தொ.இல: 416 291 7474 அல்லது 416 829 1362 அல்லது 514 400 6970
தொடர்புக்கான மின்னஞ்சல்: r.sivalingam@tgte.org; tgtequebec@live.ca
கனடா நாட்டில் அன்பளிப்புச் செய்ய விருபுவோருக்கான வங்கி விபரம்:
TD CANADA TRUST (Kennedy & Eglington), 2428 Eglington Ave. East, Scarborough, ON M1K 2P7 BRANCH NO: 01488 ACCOUNT NO: 5222923
No comments:
Post a Comment