Translate

Monday 28 May 2012

சர்ச்சையை கிளறிவிட்டிருக்கும் பிரிட்டிஷ் தூதுவரின் கருத்துகள்

வடக்கு, கிழக்கில் பொருத்தமற்ற வகையில் அதிகளவிலான இராணுவப் பிரசன்னம் இருப்பதாக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமை இலங்கையில் சர்ச்சையை கிளறிவிட்டிருக்கிறது. “நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் இராணுவப் பிரசன்ன மட்டத்தில் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் இருக்க முடியுமென நாம் கருதுகிறோம். தற்போது தொடர்ந்தும் நாம் வட, கிழக்கில் வைத்திருக்கும் பாரிய அளவிலான இராணுவ பிரசன்னத்திலும் பார்க்க ஏனைய பகுதிகளிலுள்ள இராணுவ பிரசன்னத்தின் அளவுக்கு வட,கிழக்கில் கொண்டிருக்க முடியுமென கருதுகிறோம்’ என்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் தூதுவரின் கருத்துகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார  அமைச்சு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு சக்திகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக படையினரை வாபஸ் பெறுவது சாத்தியமற்றது என்று சில தினங்களுக்கு முன்பாக  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் பிரிட்டிஷ் தூதுவரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. 
நல்லிணக்கத்தை வென்றெடுக்க வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழுவும் சர்வதேச சமூகமும் அழைப்பு விடுத்திருந்தன.

No comments:

Post a Comment