இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் செய்து வரும் திமுக, அதிமுகவிற்கு மத்தியில் தற்பொழுது தேமுதிகவும் களமிறங்கியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து இலங்கை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில திகதிகளுக்கு முன்பு ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார்.
இதுகுறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாவது, தேமுதிகவைச் சேர்ந்த நடிகர் அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
அங்கு இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்து பொது மக்களை சந்தித்துப் பேசினார். மேலும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
மேலும் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்று தெரிவித்தனர்.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பேசப்போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில், சினிமா தொடர்பாக ஐங்கரன் இண்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் அருண்பாண்டியன் இலங்கை வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள கருணாமூர்த்தி, இலங்கை தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment