சிறுவர்களின் உடல் பாகங்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் இலங்கை !
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வெறுபட்ட துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணமேயுள்ளன. அந்த வகையில் உடல் பாகங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் பற்றிய தகவல்களை சிங்கள பத்திரிகையொன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உடல் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைச் சிறுவர் சிறுமியர் பாரியளவில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான சிறுவர் சிறுமியர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், உயர் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் பலர் இவ்வாறு உடல் பாகங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் முதல் 2010ம் ஆண்டு இறுதி வரையில் வடக்கில் 700 சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகின் மிக அதிகளவில் சிறுவர் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்படும் நாடான இந்தியாவிற்கு சிறுவர் சிறுமியர் அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment