
தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்கென அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகிய எம்.பி.க்களிடத்திலேயே இவர்கள் மேற்கண்டவாறு முறையிட்டுள்ளனர். அத்துடன் தம்மைப் பார்வையிட வரும் உறவினர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எம்.பிக்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மெகசின் சிறைசாலையில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் தமது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டிருப்பதாகவும் கைதிகள் தம்மிடம் முறையிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இடநெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் நித்திரைகொள்வதற்கான வசதிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கென அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் அப்பாதுரை விநாயகமூர்த்தி ஆகிய எம்.பி.களிடத்திலேயே இவர்கள் மேற்கண்டவாறு முறையிட்டுள்ளனர். அத்துடன் தம்மை பார்வையிட வருகின்ற உறவினர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எம்.பி.க்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகசின் சிறைசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலவரத்தினையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமது சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டி ருப்பதாகவும் கைதிகள் தம்மிடம் முறையிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்
No comments:
Post a Comment