Translate

Saturday 28 January 2012

விக்கிலீக்ஸ்: இந்துக் கடவுளின் தூக்கத்தை கெடுத்த மஹிந்தர்!

விக்கிலீக்ஸ்: இந்துக் கடவுளின் தூக்கத்தை கெடுத்த மஹிந்தர்!

12 ஆம் திகதி அதிகாலை 3.00 மணி அளவில் பெருமாளை தரிசித்தனர்.

இவ்வாலயத்துக்கு சாதாரண நேரங்களில் மிக மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்றமையால் எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இவ்வாறு விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.

இந்தியாவுக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜயம் மேற்கொண்டு சென்றிருந்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தை தரிசித்து இருந்தார்.

இவரது பரிவாரங்களில் 10 பேர் கூடவே சென்று இருந்தனர்.

அனைவரும் விமானப் படையினருக்கான விசேட விமானம் ஒன்றில் 11 ஆம் திகதி பங்களூரில் ஏற்றப்பட்டு திருப்பதிக்கு அருகில் இறக்கப்பட்டனர்.

ராஜபக்ஸ டில்லிக்கு விஜயம் செய்து இராத நிலையில் இந்திய உயரதிகாரிகள் பலரும் ஆலயத்துக்கு புறப்பட்டு வந்திருந்தனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வர இருந்த நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மஹிந்தருடன் பேசவே இவ்வுயரதிகாரிகள் வந்திருந்தனர்.

விமானத்தில் இருந்து இறங்கிய மஹிந்தருக்கு அதிகாரிகளால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்தரும், பரிவாரங்களும் திருப்பதி வீதியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மஹிந்தருக்கும் பரிவாரங்களுக்கும் பெருமாளை விசேட தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

12 ஆம் திகதி அதிகாலை 3.00 மணி அளவில் பெருமாளை தரிசித்தனர்.

இவ்வாலயத்துக்கு சாதாரண நேரங்களில் மிக மிக அதிக அளவில் பக்தர்கள் வருகின்றமையால் எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இவ்வாறு விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.

No comments:

Post a Comment