
இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரனிடம் தெரிவித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய இலங்கையில் அரசியல் நிலைமை மற்றும் இலங்கை விவ காரத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகளை அடுத்தே இவர்களின் தீடிர் சந்திப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வோஷிங்டனில் கடந்த வருட இறுதியில் இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் நிரூபமாராவ், ஹிலாரியைச் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய அமெரிக்க உறவுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன. என்றும் அதேசமயம், இலங்கையின் அமைதி முயற்சிகள் குறித்தான இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் இதன்போது ஹிலாரி கிளின்ரன் நிருபமா ராவிடம் கேட்டறிந்து கொண்டார் என்றும் வோஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் மற்றும் தீர்வு முயற்சிகளில் இந்தியா செலுத்திவரும் அக்கறை குறித்து ஹிலாரியிடம் இங்கு சுட்டிக்காட்டிய நிருபமாராவ், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பிலான விடயத்தில் கொழும்பின் உறுதிமொழி இந்தியாவுக்குத் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment