Translate

Friday, 27 January 2012

கிழக்கு பல்கலைக்கழகம் சிங்கள மயமாகிறது- வானத்தை பார்த்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!


கிழக்கு பல்கலைக்கழகம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள மாணவர்களின் தொகை அதிகரிப்பு உட்பட கல்விசார், கல்விஅணிசாரா ஆளணி வழங்கள் வரை சகல பிரிவுகளிலும் அதிகரித்து வந்த சிங்கள ஆதிக்கம் தற்போது சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு சிங்களவரான பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியமனம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்போது பதில் உபவேந்தராக கடமையாற்றும் கே.பிரேம்குமாருக்கு அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையொன்றின் காரணமாக உபவேந்தர் பதவியிருந்த கலாநிதி என்.பத்மநாதன் பதவிவிலகினார். இதையடுத்து கலாநிதி கே.பிரேம்குமார் பதில் உபவேந்தராக கடமையாற்றி வந்தார்.
அண்மையில் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியில் இந்த நியமனம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன் பதில் உபவேந்தருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று கடிதம் அனுப்பியிருந்தது.
பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் கடமைகளை ஆற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியாக கடந்த ஆண்டு மார்ச் தொடக்கம் டிசம்பர் வரை பணியாற்றியுள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழக பேரவை நியமிக்கப்பட்டதையடுத்து, இந்த பதவியும் முடிவடைந்த நிலையில் இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுக்காது இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தி செல்லப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகம் படிப்படியாக சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment