Translate

Saturday, 28 January 2012

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார்!!


லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் ஆட்டோக்காரனால் ஏமாற்றப்பட்டார்!!

வாடகைக்கு அமர்த்திய முச்சக்கரவண்டி ஓட்டுனர் இலத்திரனியல் பொருட்களுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று தெல்லிப்பழை மீள்குடியேற்றப்பகுதியில் நடைபெற்றது.
இதில் இலண்டனிலிருந்து வருகைதந்து தனது வீட்டைப் பார்க்கச் சென்றவர் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை இழந்துள்ளார்.
 
இலண்டனில் வசிக்கும் லோகேஸ்வரன் சிவரூபன் என்பவர் தெல்லிப்பழையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் உள்ள தமது வீட்டைப் பார்க்கச் சென்றுள்ளார்.
சுன்னாகத்தில் இருந்து தனது வீட்டைப் பார்ப்பதற்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். முச்சக்கரவண்டியில் செல்லும் தனது பாவனையில் உள்ள மடி கணினி, புகைப்படக் கருவி, பெறுமதிமிக்க கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை எடுத்துச்சென்றுள்ளார்.

கொண்டுசென்ற இப்பொருட்களை முச்சக்கரவண்டியில் விட்டுவிட்டு வீட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது முச்சக்கரவண்டி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். தெல்லிப்பழைப் பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

No comments:

Post a Comment