சா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையிலுள்ள Stain Studioஇல் 21-01-2012 அன்று இடம்பெற்றது.
மற்றவர்களின் நலனுக்காக பங்காற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை இவ்விருதுக்காக இணைத்துக்கொண்டார்கள்.மகாராஜா நிறுவனத்தின் ஊடக அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வானது முன்னேற்றத்திற்கான எதிர்கால நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இந்த மிகப்பிரமாண்டமான நிகழ்வுக்கு வந்து குவிந்திருந்த விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் எற்றவித ஜாதி மத இன பேதமும் இன்றி நடுநிலையாக கவனிக்கப்பட்டன.அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அற்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறாக பார்க்கப்பட்டன.
05-12-2011 அன்று நடுவர்களினால் அத்தனை பேருக்குள்ளும் 26 தன்னார்வ தொண்டர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.
இறுதிநிகழ்வு Stain Studioஇல் 21-01-2012 அன்று இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்ப்பதற்காக யேர்மனியில் இருந்து Flavia Pansieri ( EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS ) வந்திருந்தார்.
இறுதியாக 15 தன்னார்வ தொண்டர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுள் முதலாவதாக Dr.s.தேவானந்தன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் தெரிவுசெய்யப்பட்டார்.
இவரது சேவைகள் இவரது அற்பணிப்புகள் இவரது விடாமுயற்சிதான் இன்று உலகுக்கே இவரை அடையாளப்படுத்தியுள்ளது யாழ் மண்ணுக்கு கிடைத்த மாபெரும் பேறு.
Osilmo autism centre எனும் தொண்டு நிறுவனத்தை நடாத்திவரும் இவர் செய்யும் சேவைகளை பார்க்கும் போது கண்ணிலிருந்து நீர் வந்துவிடும்.
இவரது இணையத்தளம்:http://www.osilmo.com
Autism எனும் தன்மை கொண்ட பிள்ளைகளை இவர் கையாளும் தன்மை முற்றிலும் வேறுபட்டது. அப்பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சராசரியான மனிதனாக வரவேண்டும் என்று அரும்பாடு படுகிறார்.
இவரின் முயற்சிகளுக்கு நாமும் வாழ்த்துகளை கூறுகின்றோம். மற்றும் இவரின் தன்னலம் பாராத இந்த சேவை தொடர்ந்து இலங்கை மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்லவேண்டும்.
தவறவிட்ட தமிழ்ப்பத்திரிகைகள்
இப்படியான நிகழ்வு ஒன்று நடைபெற்றது தமிழ்ப் பத்திரிகைகளை மட்டும் வாசிக்கும் பழக்கமுள்ள தமிழர்களை சென்றடையாதது யார் குற்றம்?
சினிமாவுக்கும் ,கொலைவெறிக்கும் , விளம்பரங்களுக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் பத்திரிகைகள் இந்திகழ்வுகளை கண்டுகொள்ளாதது ஏன்?
இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகைகளிலும் இந் திகழ்வு இது வரை இடம்பெறவில்லை.
ஒரு யாழ் தமிழனுக்கு இன்று இலங்கையில் கிடைத்த ஒரு பெரிய விருதினை தமிழ் பத்திரிகைகளை புறக்கணித்தது ஏன் ?
எமது பிரதேசங்கள் இத்தகையோரின் சேவைகளை வேண்டி நிற்கும் வேளையில் பத்திரிகைகளின் பணி முக்கியமானதல்லவா.
http://www.newyarl.com/fullview.php?id=NzQ5MQ==

No comments:
Post a Comment