Translate

Friday, 27 January 2012

யாழில் படைமுகாமில் இருந்து யுவதியின் எலும்புக்கூடு!

யாழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதிஒருவரின் உடலம் படையினர் இருந்த முகாமின் வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.யாழ் தென்மராட்சி மறவன் புலவு,தனங்கிளப்பு பகுதியில் கடந்த ஆண்டுஇறுதிப்பகுதியில் காணமால் போன யுவதிஒருவரின் எலும்பு கூடு படையினர் இருந்த முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் 28 அகவையுடைய சுப்பிரமணியம் அற்புதமலர் என்ற பெண் மறவன்புலவு பகுதியில் காணாமல் போயிருந்தார்.இன்னிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட படையினரின் முகாம் மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை நேற்று காலை கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் உடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர்.
மீடக்கப்பட்ட உடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனாவைத்தயசாலையின் பிரேத அறையில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி மிக அண்மைக்காலப்பகுதியிலேயேபடையினரின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுமக்களது பாவனைக்கென 16 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
http://www.pathivu.com/news/19843/57//d,article_full.aspx

No comments:

Post a Comment