மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றியது எனக் கூறி இதயத்தில் ரத்தம் என்ற தலைப்பிலான இருவட்டினை மதிமுக பொது செயலாளர் வைகோ தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருவட்டில் ஈழத்தமிழர்கள் வரலாறு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இலங்கை தலைவரின் அட்டூழியம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன் என வைகோ கூறினார்.
மேலும் இருவட்டினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, கணேசமூர்த்தி எம்.பி. மூலம் 139 நாடுகளின் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தேன் எனவும் தற்போது மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பின்னூட்டல் கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நாட்டில் உள்ள அதிகாரிகள் இலங்கையில் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதா? என்று கேட்டு என்னுடன் கலந்துரையாடி வருகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதயத்தில் ரத்தம் இருவட்டினைப் பற்றி சரத்யாதவ் உள்பட பலர் பராளுமன்றத்தில் உரையாற்றியும் இருக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
http://www.tamilthai.com/?p=26306
No comments:
Post a Comment