Translate

Friday 4 May 2012

ஜெனீவாவில் ஏற்படக்கூடிய அடுத்த சவாலைச் சமாளிப்பது எப்படி ?


ஜெனீவாவில் ஏற்படக்கூடிய அடுத்த சவாலைச் சமாளிப்பது எப்படி ?

கலாநிதி ஜெகான் பெரேரா
இவ் வருடம் (2012) மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு  தீர்மானத்தை அடுத்து இவ் வருடம் அக்டோபர் மாதத்தில் காலத்திற்குக் காலம் செய்யப்படும் சர்வதேச பருவப் பரிசீலனையையும் இலங்கை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான நிலைவரம் எவ்வாறு  உள்ளது என்பதனை பரிசீலிப்பதற்காக நடைபெறுவதொன்றாகும். 

இப் பரிசீலனை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது வழமையாகும். இலங்கை தொடர்பான பரிசீலனை 2008 ஆம் ஆண்டில் கடைசியாக நடைபெற்றுள்ளது. இதற்கடுத்த பரிசீலனை இவ் வருடம் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க உள்ளது. இப் பரிசீலனையின் போது அரசாங்கம் தான் எவ்வாறு  இலங்கையில் மனித உரிமைகளை நிலை நிறுத்தி வருகின்றது  என்பது பற்றிய தனது நிலைவரங்களை சமர்ப்பிப்பதுடன் இறுதியாக நடைபெற்ற (2008) பரிசீலனையின் போது அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பதனையும் கூற வேண்டும். இந்த சர்வதேசப் பருவப் பரிசீலனையின்  (ஙககீ)போது அரசு சாரா நிறுவனங்களும் தமது கருத்துகளை (உள்ளீடுகளை) வழங்க அனுமதிக்கப்படும்.
ஒரு நாட்டிற்குள் எவ்வாறு உண்மையான மனித உரிமை நிலைவரங்கள் காணப்படுகின்றன என்பதனை சரியாக தெரிந்து கொள்வதற்காகவே அரசாங்கத்தினையும் அரசு சாரா நிறுவனங்களையும் இப் பரிசீலனையின் போது கருத்துகளை சமர்ப்பிப்பதற்காக செய்துள்ள ஏற்பாடுகளுக்கான தர்க்க ரீதியான விளக்கமாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் தமது நிலைவரங்களை விமர்சன ரீதியாகப் பார்க்காத வகையிலேயே  தம்மைப் பற்றி கூறி வருகின்றன.  இலங்கையின் முன்னைய  அரசாங்கம் தன்னை ஐந்து நட்சத்திர ஜனநாயகம் எனக் கூறிக் கொண்டதனைப் போன்ற வகையினை ஒத்ததாகவே  ஏனைய பல நாடுகளும்  தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வன. அத்துடன் அரசாங்கங்கள் தமது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய  இறைமை என்பவற்றுக்கே முன்னுரிமை வழங்குவன. ஆனால் அரசு சாரா நிறுவனங்களோ மனித பாதுகாப்பு ஆட்சியில் மக்களது பங்கேற்பு என்பவற்றினையே முதன்மைப்படுத்தி பார்க்கின்றன.  இவற்றுடன் சுதந்திரமான மனித உரிமை நிபுணர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், மனித உரிமை ஒப்பந்த நிறுவனங்கள் என்பனவும் தமது சமர்ப்பணங்களைச் இப் பரிசீலனையின் போது சமர்ப்பிக்க முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த முறை 2008 இல் நடைபெற்ற சர்வதேசப் பருவப் பரிசீலனை (ஙககீ)  யின் போது  ஐக்கிய  நாடுகள் சபையின் மனித உ ரிமைகள் பேரவையில் செய்யும் சமர்ப்பணத்திற்கு இலங்கை அரசாங்கம் சிவில் சமூகக் குழுக்களையும்  அரசு சாரா நிறுவனங்களையும்  இணைத்துக் கொள்ளவில்லை. அத்தகைய ஒரு ஆலோசனையை அரசாங்கம் அப்போது செய்திருந்தால் அரசாங்கம் ஒரு சமத்துவமான நிலையினை அடைய உதவியாயிருந்திருக்கும். ஆனால் கடமைக்காக (ஆர்வமற்ற) ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்து  அதில் எத்தகைய முறையியலைப் பின்பற்றி சமர்ப்பணங்களைச் செய்யலாம் என்பது பற்றிய ஒரு விவாதம் மட்டுமே இடம்பெற்றது. அதற்கு அப்பால் எதுவித ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை. அரசாங்கத்திற்குள்ளே இருந்தவர்களுக்குக் கூட இந்த  சர்வதேசப் பருவப் பரிசீலனை (ஙககீ) பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. என்பதால் மேற் கூறியவை  (ஆலோசனைகள் செய்யாதது)  ஆச்சரியத்திற்குரியதாக இருக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலர் அறிக்கையை தயாரித்திருக்கின்றனர்.  இது திருப்திகரமானதல்ல. இச் சர்வதேச பருவப் பரிசீலனைக் கூட்டத் தொடரில் அரசாங்கம் ஆட்சி தொடர்பான மிகவும் பரந்த பண்பினதான பிரச்சினைகள் தொடர்பில் தனது அர்ப்பணத்தைக் காட்டி நடந்திருக்க வேண்டும் தவிர அக்கறையற்றதும் முறைசாராததுமான பாணியில் நடந்திருக்கக் கூடாது.
இழந்து விட்ட நம்பிக்கை
2008  ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பருவப் பரிசீலனை  (ஙககீ) யில்  ஏனைய நாடுகள் 95 சிபாரிசுகளை  செய்திருந்தன. அவற்றில் கனடா செய்திருந்த சிபாரிசு முக்கியமானது. விரைவாக 17 ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்தி அதன் வாயிலாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட அனைத்து மனித உ ரிமைகள் நிறுவனங்களது சுதந்திரத்தினையும் வலிமைப் படுத்துவதனை உறுதி செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாகும். அவற்றுடன் வேறு சில சிபாரிசுகளும் முக்கியமானவை. சர்வதேசப் பருவப்  பரிசீலனையின்  தொடர்பான  செய்முறையின் போது சிவில் சமூக நிறுவனங்களும் உ ள்ளடக்கப்படுதல் வேண்டும் என பிரித்தானியா சிபாரிசு செய்திருந்தது. மனித உ ரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு பாதுகாப்பான  சூழலை  உருவாக்குவதனை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு தொல்லைகள் தந்து துன்பத்திற்குள்ளாக்குபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என போலாந்து சிபாரிசு செய்திருந்தது. முன்னாள் முரண்பாட்டுப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன்  மூலம் பாதிப்புக்குள்ளான சமூகங்கள் நாட்டின் ஏனைய  மாகாணங்களில் வாழும் மக்களது வாழ்க்கைத் தரங்களுக்கு சமமாக  வாழ்வதனை உறுதி செய்தல் வேண்டும் என பூட்டானும் கூறியிருந்தது.
2008 ஆம் ஆண்டில் அனைத்து (95) சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தப்போவதாக அப்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  அவற்றுடன் அவற்றை ஒத்த 55 ஏனைய  சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்த உறுதி மொழியளித்திருந்தது. ஆனால் உண்மையான நடைமுறைப்படுத்தலில் திருப்தி நிலை மிகவும்  அருமையாகவே காணப்படுகிறது.  அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சுகளுக்கு அரசாங்கம் சர்வதேச ரீதியாக வழங்கியிருந்த உறுதி மொழிகள் பற்றியே தெரியாதுள்ளது. அது மாத்திரமன்றி 2008 ஆம் ஆண்டில் சர்வதேசப் பருவ  பரிசீலனையின் போது 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்ட சிபாரிசிற்கு மாறாக 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி அரசாங்கத்தின் உயர் அதிகாரப்  பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தினை  ஜனாதிபதியே கையகப்படுத்திக் கொண்டார். அதனால் 17 ஆவது திருத்தச் சட்டமே நலிவடைந்து விட்டது. ஏனைய பல சிபாரிசுகளும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றில் தான் மனித உ ரிமைகளுக்காக போராடுபவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது கோரப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறான மனித  உரிமைகளுக்காகப்  போராடுபவர்கள் பலர் இப்போது நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். நாட்டில் வழமையான வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுடன் ஒப்பிடுகையில் முரண்பாட்டு வலயங்களில் வாழும் மக்களது  நிலைமை மோசமானதாகவே உ ள்ளது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் உறுதி மொழிகளைக் கூறிவிட்டு நிறைவேற்றத் தவறுவதால் அவற்றின் மீதான நம்பிக்கைகள் அரித்துச் செல்லப்படுகின்றன.
நம்பிக்கை இழக்கப்படுவதால் உறவுகள் அநேகமாக  சீரழிவுக்குள்ளாகின்றன. சர்வதேசப் பருவப் பரிசீலனையின் போது வழங்கப்பட்ட உறுதி மொழிகள் காப்பாற்றப்படாததனால் அரசாங்கம் சில பின்னடைவுகளை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. சர்வதேசப் பருவப் பரிசீலனைக் (ஙககீ) குழுவில் உள்ள 47  பேரும்  ஐ.நா.  சபையின் மனித உ ரிமைகள் பேரøவையில் அங்கத்தவர்கள் . அவர்களே 2008 இல் பரிசீலனையை மேற்கொண்டவர்கள் என்பதோடு அவர்களைக்  கொண்ட குழுவில் உள்ள பெரும்பாலானோரே  (24) இலங்கை அரசாங்கத்தின் விருப்புகளுக்கு எதிராக அண்மையில் ஜெனீவாவில் வாக்களித்திருந்தனர்.இலங்கை அரசாங்கம்     சர்வதேசப் பருவப் பரிசீலனைக்கு (ஙககீ) சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை தொடர்பாக அந் நாடுகள் கொள்ளவுள்ள மனப்பான்மை மார்ச் மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட (ஜெனீவா) தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளவற்றின் முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்படுவதாகவும் இருக்கலாம். இலங்கை அரசாங்கத்தை அது நியமித்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான  ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா தீர்மானம் கோரியிருந்தது. 
சர்வதேச நியமங்கள்
2012 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சர்வதேசப் பருவப் பரிசீலனையின் (ஙககீ)  போது அறிக்கை சமர்ப்பிக்க  உள்ள பொறுப்புக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் நிறுவனங்களால் இலங்கை தேசிய மனித உ ரிமைகள்  ஆணைக் குழுவும் ஒன்றாகும். இவ்வாணைக் குழு 1997 ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்த போது அது நியமிக்கப்பட்ட முறை அதில்  உ ள்ளடக்கப்பட்டவர்கள், அதற்கு வழங்கப்பட்ட ஆணை அதன் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட சுதந்திரம்   என்பனவற்றின் அடிப்படையில் அது முதற்தர (அ வகுப்பு) அந்தஸ்து பெற்ற ஆணைக் குழுவாகத் தோன்றியிருந்தது. இருந்த போதிலும் 17 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணான  வகையில் 2007 ஆம் ஆண்டு ஆணைக் குழுவின் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்ட தன் காரணமாகவும் அதன் பெறுபேறுகள் பலவீனமாக  காணப்பட்டதனாலும் அதன் தரம் இரண்டாம் இடத்திற்கு (ஆ வகுப்பு) குறைக்கப்பட்டதாயிற்று.  இதன் காரணமாக ஆசிய பசுபிக் பிராந்திய தேசிய மனித உரிமைகள்  கழகத்தின் இணை அங்கத்தவராக (அண்ண்ணிஞிடிச்tஞு Mஞுட்ஞஞுணூ) அதன்  தகுதி குறைக்கப்பட்டதுடன், அதில் வாக்களிக்கும் தகுதியையும் இழந்து விட்டது. 2008 ஆம் ஆண்டு சர்வதேசப் பருவ பரிசீலனையின் போது இலங்கை அரசாங்கம்  17 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றப்போவதாக உறுதி  கூறி அதன் மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும்  ஏனைய அரச நிறுவனங்களினதும் சுதந்திரத்தை பலப்படுத்தப் போவதாகக் கூறியிருந்தது.  ஆனால் அதற்கு மாறானவையே இப்போது இடம்பெற்றுள்ளன.  இலங்கையின் தேசிய  மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் 2012 ஆம் ஆண்டு சர்வதேச ப் பருவப் பரிசீலனையின் போது சமர்ப்பிக்க உள்ள அறிக்கை பற்றி கலந்துரையாட இலங்கையின் அரசு சாரா நிறுவனங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தது. இலங்கையின் சிவில்  அங்கத்தினர்களை சந்தித்த ஆணையாளர்கள் இலங்கை தேசிய மனித உ ரிமைகள் ஆணைக் குழு முன்னர் பெற்றிருந்த முதற் தர வகுப்பு (அ வகுப்பு)  அந்தஸ்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாகக்  காணப்பட்டனர். அவ் ஆணைக் குழு  அடுத்து வரும் சர்வதேசப் பருவப் பரிசீலனையின்போது சுதந்திரமாக தனது அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாக உறுதி  கூறியதுடன், அது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க உள்ள அறிக்கையில் இருந்து சுதந்திரமானதாக இருக்கும் என்றும் உறுதி  கூறியது. அவ் ஆணைக் குழு முதற் தர (அ வகுப்பு)  அந்தஸ்து கொண்டதாக இருந்திருந்தால்  அது (தேசிய மனித  உரிமைகள் ஆணைக் குழு) சர்வதேசப் பருவ பரிசீலனை (ஙககீ) செய்முறைகளில் இப்போது கொண்டிருக்கும் செல்வாக்கு அல்லது வலிமையை விட கூடிய செல்வாக்கு அல்லது வலிமையைக் கொண்டதாக இருந்திருக்கும்.
தேசிய  மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்த பல அரசு சாரா நிறுவனங்கள் அவ் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவும் தம்மிடம் இருந்த தகவல்களையும் பகுப்பாய்வுகளையும் அதனுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருந்தன. அரசு சாரா நிறுவனங்கள் நிதி பெறுதல் மற்றும் கருத்துகள், வெளிநாடு சார்ந்த  அனுபவங்கள்  என்பன  காரணமாக சர்வதேச தரங்கள் நியமங்களுக்கு உட்பட்டதாக செயற்பட்டு வருகின்றன. அரசு சாரா நிறுவனங்களுடன் தேசிய மனித உ ரிமைகள் ஆணைக் குழு சந்தித்த கூட்டத்தின் போது தாமும் (ஆணைக் குழு) சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப செயற்பட்டு  தமது முந்தைய முதற் தர (அ வகுப்பு) அந்தஸ்தினை மீண்டும் பெற்றுக் கொள்ளப் போவதாக கருத்து தெரிவித்தனர். அரசு சாரா  நிறுவனங்களுக்கு அரச நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுகள் பகையுணர்வு கொண்டதாகவும் முரண்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து பதவிக்குவந்த  இலங்கை அரசாங்கங்கள் தம்முடன் தொடர்புடையதான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் உடன் படிக்கைகளுக்கும் பொது ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட்டுள்ளன என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் அரசு சாரா  நிறுவனங்களும் சர்வதேச நியமங்களின் (தரங்களின் ) அடிப்படையில் பங்காளிகளாக இணைந்து நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் பணிபுரியலாம்.

No comments:

Post a Comment