Translate

Friday 4 May 2012

இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் - இ‌ங்‌கிலா‌ந்து அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்

இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் - இ‌ங்‌கிலா‌ந்து அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்



போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்களஇலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இ‌ங்‌கிலா‌ந்துவெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் காணாம‌ல் ோனவ‌ர்க‌ள், கடத்தல் சம்பவங்கள் என்பன 2011இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுச் செயலரவில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளார். 

கடந்த டிசம்பரில், இலங்கையின் வடக்குப் பகுதியில் பயணித்துககொண்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்கள் இருவர் காணாம‌ல் போயுள்ளனர்.அத்துடன் 2010 இல் காணாமல‌் போன கேலிச் சித்திரவடிவமைப்பாளரான பிரகீதஎக்னெலிகொடவின் வழக்கு விசாரணை உள்ளடங்கலாக, கடந்த காலங்களிலகாணாமல‌் போனோர் தொடர்பாக எந்தவொரு விசாரணைகளுமமேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்காநல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையாவிசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சிசம்பவங்கள் தொடர்பாக,இலங்கை போ‌‌லீஸார் எந்தவொரமுறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுபபணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரினநடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனதஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புபபடையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை ன இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையிலசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களினபாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனதகவலையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கை, உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த இலங்கை தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனிஉரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும்,இலங்கையில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டிலகேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment