Translate

Friday, 4 May 2012

பிரித்தானியாவில் போட்டியிடும் 2 மேயர்களையும் தாக்கும் இலங்கை அரசு !

Sri Lanka today accused two key candidates for the mayoralty of London of showing support to pro-LTTE organisations in the UK to garner Tamil vote for elections.

Ken Livingstone the former mayor and the labour party candidate at today�s election has promised the historic Trafalgar Square, or some other prestigious London venue, for the celebration of Tamil Day on May 18 which is the anniversary of the defeat of the LTTE�s armed separatist campaign in 2009, a government website statement said.


லண்டன் மேயர் தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். அது வேறு கதை. ஆனல் முதன்மை வேட்பாளர்களாக 2 வர் உள்ளனர். இவர்களில் ஒருவரே பெரும்பாலும் லண்டன் மேயர் தேர்தலில் வெற்றிபெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன. லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெறுவார் என சில ஆங்கில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு மூலம் தெரிவித்துள்ளனர். இதற்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !


இவ்விரு வேட்ப்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருந்தது. இவர்கள் வெல்வதாயின் தமிழர்கள் வோட்டுகள் அவசியம் என்ற நிலையும் தோன்றியது. இதனால் இவ்விரு வேட்ப்பாளர்களும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் அணுகி தமக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளனர். இதில் போட்டியிட்ட ஒருவர், தாம் வென்றால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை லண்டன் மத்திய நகரப் பகுதியில் நிறுவுவேன் எனப் பகிரங்க வாக்குறுதியை வழங்கியிருந்தார். பதிலுக்கு மற்றைய வேட்ப்பாளர், தாம் வெற்றியடைந்தால் மே 18 நல்லபடியாக நடக்க அனைத்து உதவிகளையும் செய்வேன் எனத் தெரிவித்தார். இவ்விருவருமே தமிழர்களின் வாக்குகள் வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். 

இதனை தமிழர் தரப்பும், சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். இச் சந்தர்பத்தை நழுவவிடாது, லேபர் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட, கான்சர்வேட்டிவ் கட்சிக்கு சார்பான தமிழர்கள் பிறிதொரு இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் படு ஆத்திரமடைந்துள்ளது இலங்கை அரசு. எப்படிப் பார்த்தாலும் வெல்லும் நபர், ஈழத் தமிழர்களுக்கு உதவும் ஒரு நபராக இருக்கப்போகிறார் என்பதனை இலங்கை அரசு விளங்கிக்கொண்டுள்ளதே இதற்கு காரணம். அதாவது தமிழர்கள் ஒருவருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை. இருவருக்குமே ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் பொறிஸ் ஜோன்சனும், மற்றும் கென் லிவிங்ஸ்டனும் புலிகளுக்கு ஆதரவான மேயர்கள் என இலங்கை அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இவர்கள் தமிழர்களுடனும், புலிகளின் முன்னணி அமைப்புகளுடனும் சேர்ந்து இயங்குவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தற்போது பிரித்தானியாவின் ஆட்சி பீடத்தில் உள்ள கான்சர்வேட்டிவ் கட்சியின், (பிரமுகர்) மேயராகப் போட்டியிடுகிறார் என்று கூடப் பாரமல் அவரை இலங்கை அரசு தாக்கி செய்தி வெளியிட்டுள்ளமை பிரித்தானிய அரசை மேலும் ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2470

No comments:

Post a Comment