உலகெங்குமுள்ள இந்துக்கள் சமயம் சார்ந்த எத்தனையோ விதமான பண்டிகைகளைக் கொண்டாடி வருவதுடன், பல்வேறு விதமான விரதங்களையும் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த விரதங்களில் அனேகமானவை நேர்த்திக்கடனுக்காகவே அனுஷ்டிக்கப்பட்டு வரப்படுகின்றது.
ஆனால் இந்த மக்களால் பிதிர்களுக்காக அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் ஆடி அமாவாசை விரதமும், சித்திரைப் பௌர்ணமி விரதமும் முக்கியமானதாகும்
சித்திரை மாதச் சித்திரை நட்சத்திரமும், சித்திரைப் பௌர்ணமியும் சேர்ந்துவரும் நாளில் தாயை இழந்தவர்கள் அந்த அன்னையின் ஆத்ம சாந்தி பெறவேண்டி இந்த விரத்த்தினை நோர்ப்பார்.
இந்த விரத நாளான இன்று யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் கீரிமலை வில்லூன்றித் தீர்தக்கரையிலும்,கொட்ட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்க்கரையிலும் இறந்த தாய்வழி (உறவினர்கள்) பிதிர்களையும் நினைத்து தானம் கொடுப்பார்கள்.
இதே தினத்தில் மட்டக்களப்பு மாமங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தில் தீர்த்தக்கரையிலும், இந்த விழாச்சிறப்பாக்க் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சித்தர புத்திர நாயனார் கதைஆன்மாக்கள் செய்யும் நல்வினைஇ தீவினைக்கேற்ப அந்த ஆன்மாக்களுக்கு கணக்கு எழுதுவதற்கு தன்னைப் போலவே ஆள் ஒன்று தேவை என நினைத்த சிவபெருமான் பொற்பலகை ஒன்றிலே நெல்லைப் பரப்பி அதிலே தன்னைப் போல ஒரு உருவத்தினை வரைந்ததாகவும்,சிவபிரானால் வரைந்த அந்த உருவம் அழகிய குழந்தையாக மாறியது.
சித்திரை மாதச் சித்திரை நட்சத்திரமும், சித்திரைப் பௌணமியும் கூடிய தினத்திலேயே இந்தக் கழுந்தை அவதரித்து. இந்தக் குழந்தைக்கு பெற்றோர் “சித்திர புத்திர நாயனார்” எனப் பெயர் சூட்டினார்.
சித்திர புத்திர நாயனாருக்கு சிவபெருமான் வேண்டிய வாரங்களைக் கொடுத்த்துடன், இயம தர்மராஜனுடைய கணக்காளராக பணிபுரியுமாறும் பணித்தார்.
இதனை சூதமா முனிவர் உலகிற்கு எடுத்துக் கூறியதாக சித்திர புத்திர நாயனார் புராணம் தெரிவிக்கின்றது. சித்திரைக்குச் சித்திரையில் சிறந்த பௌர்ணமியில் சித்திர புத்திர்ர்க்கு சிவனார் உரைத்த கதையே சித்திர புத்திர்ர் கதையாகும்.
“ கயிலைமா நகரில் மலையடிவாரத்தில் இந்திரனும், இந்திராணியும் சுந்தரப்புதல்வரைப் பெறுதல் வேண்டி விரதமிருந்த்தாகவும் அதன்போது இந்திராணி இந்த விரத்த்தின அவமதித்த்தாகவும்,இதனால் அவர்கள் பல துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்த்தாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆலயங்களில் பூஜை முறை
உலகெங்கும் உள்ள இந்து ஆலயங்களில் இந்த விழாச்சிறப்பாக்க் கொண்டாடப்படுகின்றது.
எனினும் பூஜை முறைகளில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தென்மராட்சி மறவன்புலோ நித்தர்புலம் செல்வமுத்துமாரி ஆலயத்தில் தற்போதும் பண்டைய காலங்களைப் போலவே சித்திர புத்திர நாயனார் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொதுவாகவே இலையுதிர்காலம், வசந்த காலம், இளவேனிற் காலம் என மூன்று வகையாக்க் காலங்களை அழைப்பார். வசந்த காலம் சித்திரை புதுவருடத்துடன் ஆரம்பமாகின்றது.
இந்தக் காலப்பகுதியை “வசந்த்த்தின் வருகை,வசந்தகாலத்தில் வருகின்ற முதல் விழா என்பதால் வசந்த காலத்தில் கிடைக்கும் நுங்கு, ஈச்சம்பழம், கொய்யாப்பழம் போன்றவற்றுடன் கச்சான், கடலை இனிப்புப் பண்டங்கள், கிழங்கு வகைகள் (மரவள்ளி, இராசவள்ளி, பனங்கிழங்கு) விதவிதமான சாதங்கள், எள்ளுத் துவையல் ,என்பவற்றுடன், வெள்ளரி,வத்தகை, மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம்,உட்பட அனைத்து பழங்களும் படைக்கப்பட்டு ஏடு,எழுத்தாணி,என்பவற்றினை நிறைநாளியினுள்ளே (கொத்து நிறைய நெல்லைப்பரப்பி) குத்தி வைத்து வெள்ளைத்துணி விரித்து இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் இந்த துணியின் மீது பரப்பி (மடை வைத்தல் அல்லது மடை பரவுதல்) வைத்தபின்னர் சித்திர புத்திர நாயனார் புராண வரலாற்றினைப் படிப்பார்கள்.
300 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தினை விரும்பியவர்கள் அனைவருமே பகுதி, பகுதியாகப் படிப்பார்கள். ஒருவர் புத்தகத்தினைப் படிக்கும் போது மற்றவர்கள் அமைதியான முறையிலிருந்து அந்தக் கதையினைக் கேட்பார்கள். சிறியவர்,பெரியவர் என்ற பாகு பாடுகளின்றி ஒருவருக்கொருவர் இந்தக் கதையுடன் ஒன்றி இருப்பார்கள்.
சித்திரைக்கஞ்சி
சிவப்புப் பச்சை அரிசியினை கழுவி சிறிய பானையில் இட்டுக்காச்சி மடையில் வைப்பதுடன், அடியார்களுக்கு வழங்குவதற்காக பெரிய பாத்திரங்களில் கஞ்சிகாச்சுவார்கள். இன்றும் இந்தக் கிராம மக்கள் சித்திரைக்கஞ்சி காச்சுவதற்காக தங்களுடைய வயல்களில் விளைந்த நெல்லினையே பயன்படுத்துவதைக்காணலாம், அத்துடன்,பனையோலையில் “பிளா” கோலி அந்த பிளாவினிலேயே கஞ்சியினை வேண்டிப் பருகுவார்கள்.
இந்தக் கஞ்சியினைப் பருகுவதினால் நோய்கள் எதுவும் தம்மை அண்டாது என இந்த மக்கள் நம்புகின்றார்கள்.
No comments:
Post a Comment