Translate

Saturday 5 May 2012

இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை தமரா குணநாயகம் கடுமையாக விமர்சனம்

லங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது ஐ.நா நிரந்தர பிரதிநிதி பதவியை பறிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு முயற்சி எடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இவ்வறான நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையின் நன்மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதி பதவியைத் தவிர்ந்த ஏனைய இராஜதந்திர பதவியொன்றை தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கை இராஜதந்திர சேவையில் ஒரு சில தமிழர்களே கடமையாற்றி வருவதாகவும், அவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டால் அது சர்வதேச ரீதியில் பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிரந்தர பிரதிநிதி பதவியிலிருந்து தாமும் நீக்கப்பட்டுவிட்டால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான்காவது பிரதிநிதியை நியமித்த ஒரே நாடாக இலங்கை பதிவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு, அனுப்பி வைத்துள்ள மிக நீண்ட கடிதத்தில் தமரா குணநாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் உத்தரவுகளுக்கு விசுவாசமான வகையில் கடமையாற்றி வரும் தம்மைப் போன்றோர் தண்டிக்கப்படுவதனையும், நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முனைப்பு காட்டுவோருக்கு சன்மானம் வழங்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஓர் பிழையான முன்னுதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கத்திற்கு விசுவாசமான முறையில் தாம் கடயைமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment