Translate

Friday 4 May 2012

லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம் புலம்பல்!

Posted Imageலண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் இருவர், தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக   தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

லிவிங்ஸ்டனின் எதிர் வேட்பாளரான கொன்சவேட்டிவ்வின் போரிஸ் ஜோன்ஸனும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்க குற்றம் சுமத்தியுள்ளது.
லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெறுவார் என சில ஆங்கில ஊடகங்கள் கருத்துக்கணிப்பு மூலம் தெரிவித்துள்ளனர்
இவ்விரு வேட்ப்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி இருந்தது. இவர்கள் வெல்வதாயின் தமிழர்கள் வோட்டுகள் அவசியம் என்ற நிலையும் தோன்றியது. இதனால் இவ்விரு வேட்ப்பாளர்களும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் அணுகி தமக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளனர். இதில் போட்டியிட்ட ஒருவர், தாம் வென்றால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை லண்டன் மத்திய நகரப் பகுதியில் நிறுவுவேன் எனப் பகிரங்க வாக்குறுதியை வழங்கியிருந்தார். பதிலுக்கு மற்றைய வேட்ப்பாளர், தாம் வெற்றியடைந்தால் மே 18 நல்லபடியாக நடக்க அனைத்து உதவிகளையும் செய்வேன் எனத் தெரிவித்தார்.
இதனால் பொறிஸ் ஜோன்சனும், மற்றும் கென் லிவிங்ஸ்டனும் புலிகளுக்கு ஆதரவான மேயர்கள் என இலங்கை அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இவர்கள் தமிழர்களுடனும், புலிகளின் முன்னணி அமைப்புகளுடனும் சேர்ந்து இயங்குவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.


http://nilavaram.com...news&Itemid=461 

No comments:

Post a Comment