Translate

Saturday 5 May 2012

மகிந்தாவின் கொடுக்கில் தொங்கும்: முஸ்லீங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களின் நிலையை…………”


மகிந்தாவின் கொடுக்கில் தொங்கும் முஸ்லீங்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை கேட்கவே வேண்டியதில்லை.
  • அரசாங்கத்துக்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை கேட்கவே வேண்டியதில்லை. தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், அநீதிகளையெல்லாம் நேரில் கண்டிருந்தும் கூட, தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நாவில் வந்தபோது, அதனைத் தோற்கடிக்க முஸ்லிம்கள் அரசாங்கத்தோடு தான் நின்றார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தம்மோடு இணைந்து வாழும் தமிழர்களை விட, அரசாங்கத்தின் மீதே அதிக பற்றும் நம்பிக்கையும் கொண்டதற்கு, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்துள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் போருடன் இனவாதம், மதவாதம் என்பனவும் முடிந்து விட்டதாக அரசாங்கம் கூறிவந்தது பொய் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்றும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும் எழுகின்ற குரல்கள், எல்லா நாடும் எல்லோருக்கும் சொந்தம் என்று கூறிய அரசாங்கத்தின் கொள்கையை வலுவிழக்கச் செய்து விட்டதுஒரு கட்டத்தில் இனவாதம் பேசி சிறுபான்மையினர் அடக்கப்பட்டனர். பின்னர், இனநல்லிணக்கத்தின் பேரால் அது நடந்தது. இப்போது மீண்டும் இனவாதம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்விடங்களில், இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்களின் புனித இடங்களுக்கு அருகே, விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் நிறுவியதை நியாயமாகக் கருதும் அரசாங்கம், தம்புள்ளவில் 65 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிவாசலின் இருப்பை நியாயமாக கருத முடியாது போனது வேடிக்கை. இங்குள்ள பள்ளிவாசலும், கோவிலும் இடம்மாற்றப்படுவது போன்று, வடக்கில் கட்டப்பட்ட விகாரைகளையும் இடிக்க அரசாங்கம் தயாராக இருக்குமா?
இனி,
கேதீஸ்வரத்துக்கு ஒரு நீதி தம்புள்ளவுக்கு இன்னொரு நீதியா?
  • போருக்குப் பின்னர் மூன்று இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றன என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அதற்கான சூழல் இன்னமும் இலங்கையில் உருவாகவோ, உருவாக்கப்படவோ இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்.
    தம்புள்ளவில் சுமார் 65 ஆண்டுகளாக உள்ள மஸ்ஜித்துல் ஹாய்ரா பள்ளிவாசலை அகற்றக்கோரி பௌத்த பிக்குகளின் தலைமையில் சுமார் 2000 பேர் வரையில் கடந்த 20ம் திகதி போராட்டத்தில் இறங்கினர். பின்னர் அவர்கள் அந்த பள்ளிவாசலை இடிக்கவும் முயன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டு தொழுகையை நடத்த விடாமல்- பள்ளிவாசல் சீல்வைத்து மூடப்பட்டது.
    65 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த தொழுகை – ஒரு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. வன்முறைகள் இடம்பெறாமல் தடுப்பதற்காக என்று கூறி – பள்ளிவாசலை பொலிசார் மூடினர். 65 ஆண்டுகளாக இயங்கும் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகை நடத்துவதற்கு பொலிசார் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்தியவர்கள் சார்பில் நின்று தொழுகையை நிறுத்தி பள்ளிவாசலை மூடினர். இந்தப் பள்ளிவாசல் தம்புள்ள புனித பிரதேசத்துக்குள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமல்ல இந்துக்கோவிலும் கூட, அகற்றப்பட வேண்டிய- அவர்களின் பட்டியலில் உள்ளது. இவையெல்லாம் 6 மாதங்களுக்குள் இடித்து அழிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    அதேவேளை காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இந்து ஆலயமும், பள்ளிவாசலும் புனித பிரதேசத்தில் இல்லை என்று கூறியுள்ளார். தம்புள்ள புனிதப்பிரதேசம் முழுவதும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரிக்கின்றனர். வேறு இனத்தவர்களுக்கு அங்கு இடமில்லை என்றும், முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் சில பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களப் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இருந்தாலும், பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது என்று முடிவெடுத்தது பிரதமர் தான்.
    யாழ்ப்பாணத்தில் போய் நின்று இன நல்லிணக்கம் குறித்தும், நாடு முழுவதும் எல்லோருக்கும் சொந்தம், யாருக்கும் ஏந்தப் பகுதியும் சொந்தமில்லை என்றும் கூறிய பிரதமரே, தம்புள்ள புனித பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்கிறார். எப்படித்தான் அரசாங்கம் இனவாதத்தை கட்டுப்படுத்திக் கொண்டாலும், அது அவ்வப்போது வெளிப்பட்டுத் தான் வருகிறது.  முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இவ்வாறு வழிபாட்டுக்கு மறுக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது இதுதான் முதல் முறையல்ல. அனுராதபுரத்தில் ஒரு தர்கா அண்மையில் இடித்து அழிக்கப்பட்டது. அதுபோல மேலும் சில நாசவேலைகள் நடந்தேறியுள்ளன. இந்தளவுக்கும் அதிகளவு முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் உள்ளனர். அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.  நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் தான் இருக்கிறார். ஆனால் அவரால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை. இது தனியே முஸ்லிம்களுக்கு எதிரான நிலை என்றில்லை. பௌத்த சிங்களம் தவிர்ந்த பிற மத, இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள், இலங்கையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை வெளிப்படுத்தும் ஒரு ஆதாரமே இது.
    தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதும், அங்கு பௌத்த சின்னங்களை நிறுவுவதும் தொடர்கதையாகவே உள்ளது. வடக்கில் புனிதமான இந்து ஆலயச் சுற்றாடல்கள் பலவற்றில் இப்போது புத்தர் சிலைகள் முளைத்துள்ளன.  மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம், பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவில், நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயம் போன்றவற்றின் சுற்றாடலிலும், கனகராயன்குளத்தில் மாங்குளத்தில், மடுமாதா தேவாலயச்சூழலில், இப்போது திருக்கேதீஸ்வரத்தில் என்று தமிழர்களுடன் எந்தவகையிலும் தொடர்புபடாத இடங்களிலெல்லாம் இப்போது பௌத்த சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் அரசாங்கம் இனநல்லிணக்க முயற்சியாக காட்டினாலும் தமிழர்கள் என்னவோ இவற்றை தம் மீதான ஆதிக்கச் சின்னமாகவே கருதுகிறார்கள்.
    தமிழர்களின் வாழ்விடங்களில், இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்களின் புனித இடங்களுக்கு அருகே, விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் நிறுவியதை நியாயமாகக் கருதும் அரசாங்கம், தம்புள்ளவில் 65 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிவாசலின் இருப்பை நியாயமாக கருத முடியாது போனது வேடிக்கை. இங்குள்ள பள்ளிவாசலும், கோவிலும் இடம்மாற்றப்படுவது போன்று, வடக்கில் கட்டப்பட்ட விகாரைகளையும் இடிக்க அரசாங்கம் தயாராக இருக்குமா? போருக்குப் பின்னர், இன நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது.அரசாங்கத்துக்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி மகிந்தாவின் கொடுக்கில் தொங்கும் முஸ்லீங்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை கேட்கவே வேண்டியதில்லை.
    தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள், அநீதிகளையெல்லாம் நேரில் கண்டிருந்தும் கூட, தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நாவில் வந்தபோது, அதனைத் தோற்கடிக்க முஸ்லிம்கள் அரசாங்கத்தோடு தான் நின்றார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தம்மோடு இணைந்து வாழும் தமிழர்களை விட, அரசாங்கத்தின் மீதே அதிக பற்றும் நம்பிக்கையும் கொண்டதற்கு, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்துள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் போருடன் இனவாதம், மதவாதம் என்பனவும் முடிந்து விட்டதாக அரசாங்கம் கூறிவந்தது பொய் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்றும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும் எழுகின்ற குரல்கள், எல்லா நாடும் எல்லோருக்கும் சொந்தம் என்று கூறிய அரசாங்கத்தின் கொள்கையை வலுவிழக்கச் செய்து விட்டது. ஒரு கட்டத்தில் இனவாதம் பேசி சிறுபான்மையினர் அடக்கப்பட்டனர். பின்னர், இனநல்லிணக்கத்தின் பேரால் அது நடந்தது. இப்போது மீண்டும் இனவாதம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
    இலங்கையில் நிரந்தரமான அமைதியை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகத்துக்கு இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. அதுவும் இலங்கைக்குப் பின்னால் நின்று உதவிய முஸ்லிம் நாடுகளை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் சர்வதேச அரங்கில் இலங்கையைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்ட முஸ்லிம் தலைமைகளுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் விழுந்த பேரிடியாகும். இதேநிலை தொடருமானால், சர்வதேச அரங்கில் எஞ்சியிருந்த ஆதரவையும் இலங்கை விரைவிலேயே இழந்து விடும்.

No comments:

Post a Comment