ஆலயம் என்பது ஆன்மா வகிக்கும் இடம் இது அனைத்து இந்துக்களுக்கும் உரியது. இங்கு அரசியல் பேதம் உயர்வு, தாழ்வு, படித்தவன், படியாதவன், ஏழை பணக்காரன் என்ற பேதமில்லை எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்ற வகையில் சகலரும் சமமாகவே உள்ளனர். ஆலய தர்மஹர்த்தா சபையும் சமமாகவே பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி இந்து ஆலயங்களை அரசியல்களமாக பாவிக்க தர்மஹர்த்தா சபை இடமளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் ஆலய தர்மஹர்த்தா சபையினருக்கும், ஆலய இந்துக் குருமார்களுக்குமான ஒரு நாள் ஆன்மீக கருத்தரங்கு நாவற்குடா இந்து கலசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை தாங்கி தலைமை உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
அரசியல் வாதிகள் ஆலயங்களுக்கு அழைக்கப்பட்டாலோ அல்லது பேசுவதற்கு வந்தாலோ இங்கு நீங்கள் ஆன்மீகம் சம்பந்தமாக மாத்திரமே உரையாற்றுங்கள் என்று கூறவேண்டியது ஆலய தர்மஹர்த்தாவின் கடமையாகும். இது நானாக இருந்தாலும் அவ்வாறே கூறவேண்டும். ஏனெனில் ஆலயங்கள் இந்து அரசியல் வாதிகள் அனைவருக்கும் பொதுவானது ஒது தனிப்பட்ட அரசியலுக்கு மாத்திரம் உரியதல்ல.
இதை தர்மஹர்;த்தா சபை நிருவாகிகள் தாம் விரும்பிய அரசியல் பிரிவில் ஈடுபடுவது அவர்களது சுதந்திரமாகும். ஆனால் ஆலயத்தின் உள்ளே அரசியல் மேடைகள் உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இதை ஏன் நான் கூறுகின்றேன் என்றால் ஆலயம் புனிதமானது. இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது.
என்னைப் பொறுத்தவரை நான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன். ஆனாலும் எனது அரசியலை வைத்து இந்து ஆலயங்களின் புனிதத்தை பாதிக்க இடமளிக்க மாட்டேன். இதனால் தான் ஆலயங்கள் நிகழ்வுக்கு அழைத்தால் அங்கு சென்று ஆன்மீகச் சொற்பொழிவு செய்கின்றேன். எனது சொத்து ஆன்மீகம் அதை வளர்ப்பது பாதுகாப்பது எனது கடமை. ஆனால் சில அரசியல் வாதிகள் என்னைப் பார்த்து இவர் கோயிலுக்கு சென்றால் அரசியல் பேசுகின்றார் இல்லை, நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்க விட்டிருந்தால் ஆடு, கோழி வெட்டுவதை கோயிலில் நிறுத்தச் செய்யுங்கள் என கேட்டிருப்பான் என கேலி செய்தனர்.

“நாய் வாகனத்தை பார்த்து குலைத்தால் நாய்க்குத்தான் துன்பம் வாகனத்திற்கு எந்த தளம்பலும் இல்லை” எமது சமயத்தை எனது அரசியல் பாதை பாதிக்குமானால் அதில் இருந்து நானாக நீங்கி விடுவேன். ஏனெனில் எமது சமூகத்தில் ஆன்மீகத்தை கட்டிக் காப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
ஆலயங்கள் சமூதாய மையங்களாக திகழவேண்டும். ஆலய தர்மஹர்த்தாக்கள் சமூதாயத்தின் முன் உதாரணதாரர்களாகவும் நீதி நியாய தர்மங்களை பின்பற்றுபவர்களாகவும் அமைய வேண்டும். எமது இந்து கலாசாரங்களை எம்மக்களிடம் வளர்க்க வேண்டும் ஆலய வருமானத்தில் குறைந்தது பத்தில் ஒரு பங்கையாவது சமூதாய தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இந்து சமயம் சனாதன தர்மம் எனப்போற்றப்பட்டது. இச்சமயத்தின் மூலம் சமூகசேவை புரிதல் அவசியமாகும். உங்கள் பகுதிகளில் உள்ள வறிய மக்களின் கல்வி, வாழ்வாதாரம், சுயதொழில், சுயதொழில் பயிற்சி, மருத்துவம், உட்பட்ட பல துறைகளில் மக்களுக்கு ஆலய நிதிகள் பயன்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து ஆலய நிதிகளில் கோயில் கட்டுவதிலும், உடைப்பதிலும், புனரமைப்பதிலும், கும்பாவிடேகம் புரிவதிலும், பூசை புரிவதிலும் மாத்திரம் செலவிடக் கூடாது.
பொதுவாக இன்று ஆலய வழக்குகள் பல நீதிமன்றங்களில் உள்ளது. ஒரு காலத்தில் நீதிமன்றமாக விளங்கிய ஆலயங்கள் இன்று நீதிமன்றங்களில் நிற்பது வேதனையை ஏற்படுத்துகின்றது. ஆலயங்களின் பிரச்சினைகள் நீதிமன்றம் செல்வதை நிறுத்தி சமரச பேச்சுக்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். கும்பாபிடேகம் என்ற ரீதியில் செலவிடப்படும் பொதுமக்களின் நிதிகளை வீன்செலவுகளுக்கு உட்படாது மிகவும் சிக்கனமாகவும் ஒழுங்காகவும் பயன்படுத்தல் அவசியமாகும்.

கோயில்களில் ஆன்மீகம் சாராத எந்த நிகழ்வும் இடம்பெறக் கூடாது. நாதஸ்வரத்தில் கூட ஆன்மீக உணர்வை வளர்க்கும் பாடல்களே இசைக்கப்பட வேண்டும். ஆலயத்துள் பிரவேசிக்கும் அனைவரையும் இந்து கலாசார உடைகளுடன் அனுமதிப்பது தர்மஹர்த்தாக்களின் கடமையாகும்.
அதுமட்டுமின்றி ஆலயங்களில் நடைபெறும் விரதங்கள் விழாக்களை ஒரு வியாபார செயற்பாடாக நடாத்தாது மக்களிடையே ஆன்மீக செயற்பாடாக நடாத்த வேண்டும். கூட்டுவழிபாடு ஆன்மீக சமய போதனைகள், அறநெறிப் பாடசாலைகள், ஆன்மீக நூலகங்கள், அன்னதான மடங்கள், கலாசார மண்டபங்கள் உட்பட்ட ஆன்மீகத்துடன் தொடர்புபட்ட சேவைகளை தர்மஹர்த்தா சபை எற்படுத்தல் வேண்டும்.

ஆலய தர்மஹர்த்தாக்கள் நிதி மோசடி அற்றவர்களாகவும், ஒழுக்கச் சீர்கேடு அற்றவர்களாகவும், இந்து ஆன்மீகத்தை இயன்றவரை கடைப்பிடிப்பவர்களாகவும், பட்டம், பதவி, புகழ் இவற்றை நோக்காது ஆன்மீக மேன்பாடு கருதி உழைப்பவர்களாகவும் இருப்பதுடன் சைவ தீட்சை உட்பட்ட ஆன்மீக கருமங்களை பெற்றுக் கொண்டவராகவும் இருத்தல் உத்ததமாகும்.
ஆலய மதகுருமார்கள் தர்மஹர்;த்தா சபையை கட்டுப்படுத்தாது ஆன்மீக ஆலோசனையை வழங்கி பொது மக்களுடனும், தர்மஹர்த்தாக்களுடனும் நல்லுறவை பேணி அன்புடனும், ஒழுக்கத்துடனும் மக்களை ஆன்மீக வழிப்படுத்தும் நோக்குடனும் செயற்படுதல் அவசியமாகும்.
பூசைகள் முடிவுற்றதும் ஆன்மீக போதனைகள் நற்சிந்தனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். நூறு வீதமாக பஞ்சமா பாதங்கள் மதகுருமார்களில் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆண்டவருக்கு அடுத்ததாக ஆலயகுரு மக்களால் மதிக்கப்படும் நிலையை தமது நடவடிக்கைகளால் குருமார் எற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனால் எமது இந்து சமயத்தை சாராத எவ் இன மக்களினதும் அரசியல் கடமையில் இணைவதும், இணைந்திருப்பதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான பல விடயங்கள் எடுத்துக் கூறினார்.

No comments:
Post a Comment