Translate

Tuesday 2 October 2012

5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு இணக்க

ok_2_10
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களின் 6வது கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து மாத்திரம் இதுவரையில் தீர்க்கமான முடிவொன்றும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. சர்வதேச தரத்திற்கு ஏற்ப நாட்டின் தேசிய வருமானத்தின் ஆகக் கூடுதலான சதவீதம் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும். பல்வேறு கல்வித்துறைகளுக்கான தொழில் ரீதியான பயிற்சிகள் கொடுக்கப்படுவதுடன் இதற்கான ஆய்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப்படும். இதன் மூலம் தரமான கல்வியை நடைமுறைப்படுத்தி தேசிய சர்வதேச தரத்திற்கு ஏற்புடைய வகையில் கல்வியின் தரம் உயர்த்தப்படும்.
2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் விசேட தொழில்சார் உத்தியோகத்தர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். இதற்கு அங்கீகாரமளிப்பதற்காக விசேட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. எமது பல்கலைக்கழகங்களுக்கு தேவையான, உயர் தரமுடைய பேராசிரியர்களை நியமிப்பதற்கும் ஏற்கனவே உள்ள திறமை மிக்கபேராசிரியர்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவதற்கும், வெளிநாடு சென்றவர்களை மீண்டும் அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
3. உயர்கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான விசேட ஜனாதிபதி குழுவொன்றும் நியமிக்கப்படும். இதன் மூலம் கல்வி அறிவில் ஆசியாவிலேயே இலங்கையை முன்கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
4. முதுமாணி, கலாநிதி பட்டங்களை வழங்குவதற்கு தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
5. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
6. உயர்கல்வித்துறையை திருத்தி அமைக்கும் போது பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.
7. சகல உயர்கல்வி நிறுவனங்களையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல்.
8. தேசிய அபிவிருத்திக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் அனுசரணையை பெற்றுக் கொள்ளுதல்.

No comments:

Post a Comment