Channal 4 தொடைக்காட்சி வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்கள் பொய் எனவும் ஜநா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை பக்கசார்பானது எனவும் குற்றம் சாட்டிய சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைநடைமுறைப்படுத்துமாறே அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்துகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையால் அமைக்கப்பட்ட கண்துடைப்பு. அதனையே நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது சிங்கள அரசு.
கொத்துக் கொத்தாய்க் கொன்றது அமெரிக்காவிற்குத் தெரியவில்லையா ? சரணடையச் சென்றவர்களை சுட்டுக் கொன்றது தெரியாதா ? இன்னும் சிறைச்சாலைகளுக்குள்ளும், முட்கம்பிவேலிகளுக்குள்ளும் மக்கள் இருப்பது தெரியவில்லையா ?
நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை ஓட ஓட விரட்டி, பாதுகாப்பு வலையம் என்று சொல்லி ஓரிடத்திற்கு அழைத்து, அங்கும் மருத்துவ மனையிலும் குண்டுமழை பொழிந்து கொன்றொழித்து, ( தன் நாட்டு மக்களைக் கொல்வது இனப்படுகொலை இல்லையா ? - அமெரிக்காவிற்கு இது தெரியாதா ? ) முள்வேலிகளுக்குள் மக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைத்ததோடு, அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் செய்வதும், விகாரைகள் அமைத்து சிங்களமயமாக்குவதும் உலகநாடுகளுக்குத் தெரியவில்லையா ?
ஒத்து ஊதும் நாடுகளுக்கெல்லாம் வணிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தும், இடங்கள் கொடுத்தும், தமிழனின் இடத்தை எடுத்துக் கொள் என்று சொல்வதுதான் சரியா ? வாங்குபவன் மனச்சான்றைத் தொலைத்து விட்டானா ? அதனால் தான் மனித உரிமைகள் மன்றத்தில் பொய்யை அரங்கேற்றி மனிதத்தைச் சாகடிக்கும் செயலை அந்த நாடுகள் செய்கின்றனவா ?
மனிதத்தை சாகடிக்கும் இந்த நாடுகள் மனித உரிமை என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிராக இயங்குகிறோம் என்ற உண்மையை உணர்வது எப்பொழுது ? இல்லை உணரவே வாய்ப்பு இல்லையா ?
இன்னும் காலம் இருக்கிறது. உண்மை நிலையை உங்கள் கண் திறந்து பார்த்து அதற்குப்பிறகு பேசுங்கள். குற்றம் செய்வதை விட குற்றம் செய்தவனோடு இணைந்திருப்பதும், குற்றம் செய்தவனுக்கு உதவி செய்வதும் மாபெரும் குற்றம் என்று உலக நாடுகள் என்று உணரும் ? வல்லரசு என்று வாழ்வதைவிட நல்லரசாக வாழ்ந்து மக்கள் நலம் பேணும் அரசினையே வணங்கும் அரசாக வரலாறு பதிவு செய்யும்.
கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்...
அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்!
மீண்டும் ஜநாவால் ஏமாற்றப்படப்போகும் தமிழர்கள்.
இரண்டு ஆண்டுகளில் செய்யாதவன் ஓர் ஆண்டின் என்ன செய்வான் ?
No comments:
Post a Comment