Translate

Saturday 10 March 2012

இராணுவத்தை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்: நிமால் சிறிபால டி சில்வா


நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, சமாதானத்தை நிலை நாட்டுவதற்குப் பங்களித்த படைவீரர்களை அரசாங்கம் ஒருபோதும் பலி கொடுக்காது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்பதற்கு உச்சக்கட்ட முயற்சிகளைச் செய்து வருகிறோம். இந்நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் குழு கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு, அதனை தோற்கடிக்க தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் படையினரை ஒருபோதும் பலிகொடுக்க மாட்டோம். இராணுவ மட்டத்தில் இடம்பெறும் விசாரணைகள் காட்டிக்கொடுப்பு அல்ல. தவறுகள் ஏதும் நடந்திருந்தால் அது தொடர்பாகவே அங்கு விசாரணை நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எமது அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் நேர்மையாக அவற்றை ஏற்று எம்மை திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment