நாட்டில் மும்மொழியறிவு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டியதே முதன்மையானது.
1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, 1944ம் ஆண்டில் தனிச் சிங்கள மொழிக் கொள்கை தொடர்பான யோசனைத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்தியிருந்தால் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment