Translate

Monday 16 April 2012

ஆட்கடத்தல்களால் வந்த வினை – அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரும் சிறிலங்காவுக்குத் தலையிடி

வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கூட்டத்தொடரில் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனாலும் சிறிலங்காவில் ஆட்கடத்தல்களும், ஆட்கள் காணாமற் போகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக அண்மையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோர் கடத்தப்பட்ட விவகாரம் சிறிலங்காவை மீண்டும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முன்பாக இழுத்துச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment