ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான “உளவுப்பிவினரே' இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக் கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கம் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது.
இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக் குழு இங்கு வருகிறது. இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி மஹிந்தவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டமாகும்.
தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும். இலங்கை அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்வதாலும், அதன் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதாலும் இந்தியாவிற்கு பாரிய நஷ்டம் ஏற்படும்.
இதனால் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான உளவுப் பிரிவினரென்ற ரீதியிலேயே இக்குழு இங்கு விஜயம் செய்கிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்தியக் குழுவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டமை வரவேற்புக்குரிய விடயமாகும். தமிழர்களின் உணர்வுகளை தமிழ் நாட்டு மக்கள் வெளிப்படுத்தியமையே இதற்கு காரணமாகும்.
இக்குழுவின் விஜயத்தால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மாறாக அம் மக்களின் வளங்கள் சூறையாடப்படவுள்ளதென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

No comments:
Post a Comment