வடபகுதி மக்கள் தொடர்பில் இந்தியக்குழு ஆராயக்கூடாது |
இலங்கை வரும் இந்திய சர்வகட்சிகளின் நாடாளு மன்றத் தூதுக்குழுவினர் வடக்கு மக்களின் விடயங்களையோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவோ ஆராயக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்ட மையாலேயே இலங்கையில் யுத்தம் ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து தமிழ் மக்களும் பாரியளவிலான அழிவுகளைச் சந்தித்தனர். இவ்வாறானதொரு பேரழிவுகளை மீண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இந்தியா உருவாக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையானது எந்த வகையிலும் உள்நாட்டின் தேசிய அரசியலை பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது. ஏனெனில் இந்தியாவுக்கு இலங்கை விடயங்களில் தலையிட உரிமையோ அதிகாரமோ கிடையாது. இலங்கை ஒரு போதும் காஷ்மீர் விடயத்திலோ தமிழ் நாட்டு அரசியலிலோ தலையிட்டது இல்லை.
வன்னி மக்களின் விடயங்களை ஆராய்வதாகக் கூறி உள்நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த இலங்கைவரும் நாடாளுமன்றக் குழுமுயற் சிக்கக் கூடாது. நாட்டில் பெரும் பின்னடைவுகளை சந்திக்க மூல காரணமாக இருந்த புலிகளுடனான யுத்தம் ஏற்பட இந்தியாவின் தலையீடு முக்கியமானதாக அமைந்திருந்தது. இதனை அனைவரும் அறிவர்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் என்பது உள்நாட்டு விவகாரம். இதனை ஆராய வெளிநாடுகள் முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. எனவே இலங்கை வரும் இந்தியத் தூதுவர் குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு விடயங்களில் தலையி டவோ அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவோ முயற்சிக்க கூடாது என்றார்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 16 April 2012
வடபகுதி மக்கள் தொடர்பில் இந்தியக்குழு ஆராயக்கூடாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment