Translate

Thursday 19 April 2012

சீனாவில் 1500 ஆண்டுகள் பழைமையான 3000 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு _


  சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் ஹென்டன் பகுதியில் சுமார் 1500 வருடங்கள் பழைமையானவை என ஊகிக்கப்படும் மூவாயிரம் புத்தர் சிலைகள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் மிகப்பாரியளவு செயற்திட்டமாக இந்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



பாரம்பரிய ரீதியாக மக்கள் தமது கலாசாரத்தோடு ஒன்றியிருந்துள்ளமையை இந்தச் சிலைகள் எடுத்துக்காட்டுவதாக சிக்காகோ பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் கெதரின் சியாங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி சீன மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மேலும் பல்வேறு தடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். _

No comments:

Post a Comment