ஓப்பற்ற தியாகி அன்னை பூபதி, இனஇருப்பிற்காக நீதிகேட்டுப் போராடி தன் உயிரை அர்ப்பணித்து இருபத்தி நான்கு ஆண்டுகள் கரைந்து மறைந்து போயின என்றாலும், அப்பழுக்கில்லாத அந்த வீரத்தாயின் நினைவுகள் எப்போதும் ஈரமாகவும் உயிர்த்துடிப்புடனுமேயே எம் உள்ளங்களில் தங்கியிருக்கின்றன.இனத்தை அழிவின் மேகங்கள் சூழ்ந்து, அச்சமூட்டிக்கொண்டிருந்த பொழுதுகளில், தமிழீழத் தாயின் எழுச்சியின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவாக, தன் உயிரை முன்னிறுத்தி நீதி கேட்டுப் போராடிய வீரத்தாய் அவர்.
தேசத்தைப் பாதுகாக்க, தேசத்தின் குழந்தைகளைப் பாதுகாக்க, வீரத்தாயாக எழுந்து முன்நின்று தன் உயிரை அர்ப்பணித்தார்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில், அவரது தியாகம் உயர்ந்த உன்னதமான இடத்தில் வைத்துப் பூசிக்கப்படவேண்டியது.
தேசத்தின் தாயாக அவர் தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
நெஞ்சை உருகவைக்கும் இதபோன்ற தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது. வீண்போக விடக்கூடாது.

இன்று, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், தன் இலக்கு நோக்கி, புதிய தளங்களில், புதிய வடிவங்களில், தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கும் சித்தனைக்கும் ஏற்ப, அவர் வகுத்துவிட்ட பாதை வழியே உறுதியுடன் பயணப்படுகின்றது.
உலக அரங்கில், தவிர்க்கப்பட முடியாத பிரச்சினையாக, எமது பிரச்சினை தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்தில், எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் கனவுகளைத் தாங்கிய இளைய சந்ததியின் போராட்ட ஈடுபாடு எமது விடுதலைப் போராட்டத்தை காத்திரமான அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றிருக்கின்றது.
நாம் இந்தக் கட்டத்தை அடைய, ஆயிரம் பல்லாயிரம் ஈகங்களும், வகைதொகையற்ற அர்ப்பணிப்புக்களும் இழப்புக்களுமே காரணம்.

பூபதியம்மாவின் அற்புதமான தியாகம், வயதான காலத்திலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி, தன்னை வருத்தி உருக்கி தன் உயிரை முழுமையாகக் கருக்கி, இந்த இனத்திற்கு வெளிச்சம் காட்டிய அந்த அருமைத்தாயின் தியாகம், எமக்கெல்லாம் உயிர்ப்பேற்றட்டும்.
குறிப்பாக பெண்இனத்திற்கு எம் தமிழ்த் தாய்க்குலத்திற்கு அவர் விட்டுச்சென்ற செய்தி மகத்தானது.
தேசத்தையும் தேசத்தின் குழந்தைகளையும் காப்பாற்ற ‘ஒரு தாயாக முன்செல்கின்றேன்’ என்பதுதான் அச்செய்தி.

No comments:
Post a Comment