Translate

Thursday, 19 April 2012

யாழில் இராணுவம் முற்றாக வாபஸ் பெறப்பட வேண்டும்!


சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழு  இலங்கை அரசும் அதிகாரிகளும்இராணுவமும் முன்கூட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே  அழைத்துச் செல்லப்படுகிறது. இலங்கை மந்திரிகள்பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்பு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு எம்.பி.க்கள் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.  யாழ்ப்பாணத்தில் மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் எம்.பி.க்கள்அரசியல் பிரதிநிதிகள் இந்திய எம்.பி.க்கள் குழுவை சந்தித்தனர். 


அப்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இராணுவம் முற்றிலும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதே யாழ்ப்பாணம் மக்களின் விருப்பம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை காரணம் கூறி இராணுவம் குவிக்கப்பட்டது. ஆனால் போர் முடிந்து ஆண்டுகள் ஆகியும் இராணுவம் அந்த பகுதியில் நீடிப்பது சரியல்ல. இராணுவம் தினமும் தமிழ் மக்களை சோதனை நடத்துகிறது. அவர்களது அன்றாட வாழ்வில் தலையிடுகிறது என்றும் முறையிட்டனர்.

வன்னிப்பகுதி தண்ணீர் ஊத்து என்ற இடத்துக்கு சென்றபோது இராணுவம் தங்களை சித்ரவதை செய்வதாக எம்.பி.க்கள் குழுவிடம் புகார் தெரிவித்தனர். முகாம்களில் இருக்கும் தமிழர்கள் மிரட்சியுடன் காணப்பட்டனர். இராணுவத்தின் அனுமதியுடன்தான் எந்த காரியத்தையும் செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இராணுவத்தின் தலையீடு இருப்பதாக கூறினார்கள்.  

No comments:

Post a Comment