இந்திய பாராளுமன்றின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சாசனத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அது, இலங்கை பாராளுமன்றின் அபிலாஷைகளுக்கு அமைவாகவே செய்யப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது இந்திய அரசாங்கமோ இலங்கை அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்து தீர்மானிக்க இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் சாசனத் திருத்தம் போன்ற முக்கிய விடயங்கள் பற்றி இலங்கை பாராளுமன்றில், இந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் கண்டறியும் நோக்கில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள விஜயம் வரவேற்கத்தக்கது என்ற போதிலும், இலங்கை ஓர் இறைமையுடைய நாடு என்பதனை அவர்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment