Translate

Thursday 7 July 2011

வடக்கில் மாத்திரம் 5 இலட்சத்து 36,000 விதவைகள்!

யுத்தம் மற்றும் காரணங்களினால் இலங்கையில் 5 இலட்சத்து 3684 பேர் விதவைகளாகியுள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுயதொழில் வாய்ப்புகள் வழங்கவும் உதவிகள் வழங்கவும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடத்தில் 4 கோடி 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் மேம்பாட்டு அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சார்பாக பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30,018 விதவைகளும் மத்திய மாகாணத்தில் 65,880 விதவைகளும் ஊவா மாகாணத்தில் 33,531 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 45,989 பேரும் தென் மாகாணத்தில் 58,221 பேரும் வட மேல் மாகாணத்தில் 74,005 பேரும் வட மத்திய மாகாணத்தில் 36,539 விதவைகளும் உள்ளனர்.

இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சமூக அந்தஸ்தை மேம்படுத்தவும் சுயதொழில் பயிற்சி வழங்கவும் உதவிகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதவைகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 2011 இல் 4 கோடி 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது............. read more

No comments:

Post a Comment