Translate

Thursday, 21 June 2012

மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..


மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..
ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி அங்கத்தவர் இருவரின் கொலைக்கு அரசியல் பின்னணி உள்ளதாகவும் இந்த இரு மரணங்களுக்குமான பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ அரசே ஏற்க வேண்டும் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 

நேற்று (19) கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தற்போது மக்களுக்குரிய பொறுப்பு மனிதப் படுகொலை புரியும் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே.

ஹம்பாந்தோட்டை கொலையுடன் தொடர்புடைய அமரே என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமையானது, அரச தரப்பைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் ஆலோசனை காரணமாகவே. அதுவும் அவர் பழைய குற்றம் ஒன்றுக்காகவே நீதிமன்றில் சரணடைந்தார். இதனை அவரே பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்றும் லால் காந்த தெரிவித்தார். 

No comments:

Post a Comment