போரின் போது துணைவனை இழந்த 29 அகவை தாய் ஒன்று கருத்தரித்து பிறந்த சிசுவினை புதைத்து 15 நிமிடங்களில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணின் கணவர் போரின் போது உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோரின் பாதுகாப்பில் அவரும் அவரது நான்கு வயது மகளும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ள நிலையிலேயே அப்பெண் குறித்த சிசுவுக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையிலேயே அவரது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றுக்கு அருகில் சிசுவை புதைத்துள்ளார். இதனை கண்டுள்ள மேற்படி பெண்ணின் தாயார் அயலவர்களின் உதவியுடன் சிசுவை உயிரோடு மீட்டுள்ளனர் மீட்ட சிசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment