Translate

Wednesday, 29 August 2012

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோ ர் திரண்டனர்.அவர்கள் அகதிகள் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாலசிங்கம், விடுதலை செழியன், செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரையான்சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமை முற்றுகையிட சென்றனர்.குமணன்சாவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். திருமாவளவன் மற்றும் 500 பேரையும் கைது செய்தனர்.
இனவாதிகளின் ‘ஈழத் தாய்’ ஜெயலாலிதா பொலிஸ் முகாம்களில் இருப்போர் குறித்து மூச்சு விடுவதில்லை மாறாக போராட்டம் நடத்துவோரை மூர்க்கமாகநடத்தும்

No comments:

Post a Comment