Translate

Wednesday, 29 August 2012

பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர் : ‘அறிஞர்’ கருணா


கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முரளீதரன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கருக்காக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாழைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.2008ம் ஆண்டில் தாம் தேர்தலில் போட்டியிடாத காரணத்தினாலலேயே பிள்ளையான் தேர்தலில் வெற்றியீட்டியதாக கருணா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான் தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர், மீண்டுமொரு தடவை முதலமைச்சர் பதவியை வகிக்கும் தகுதி அவருக்குக் கிடையாது என கருணா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment